பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு5. கூர்ம புராணம்) இப்புராணம் பற்றி. விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மன்னன் இந்திரத் துய்மனுக்குச் சொல்லியதே இப்புராணமாகும். இப்புராணத்தில் பக்திமார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகள், பரப்பிரம்மம் பற்றிய ஞானம், ஆன்ம விடுதலை அடைய செய்யப்பட வேண்டிய ஆன்மிகப் பயிற்சிகள் என்பவை பற்றிப் பேசப்பெறுகிறது. நைமி சாரண்ய வனத்தில் கூடிய முனிவர்களுக்கு, விஷ்ணு கூறியவற்றை லோமஹர்லுனர் கூறினார். கூர்ம புராணத்தின் அழிந்துபோன மூலப் பகுதியில் பிராமி, பாகவதம், செளரி வைஷ்ணவி என்ற நான்கு பிரிவுகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இப்பொழுது கிடைக்கும் கூர்ம புராணத்தில் பிராமி சம்ஹிதை மட்டுமே உள்ளது. இதில் 6,000 பாடல்கள் மட்டுமே உள்ளன. இந்து சமயத்தின் மூன்று முக்கியப் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் என்பவை பற்றிப் பல செய்திகளை இப்புராணம் கூறுகிறது. சைவ, வைணவப் போராட்டத்திற்கு அப்பாற்பட்டு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு முயற்சி. அதாவது சிவன், விஷ்ணு ஆகிய இருவரும் வெவ்வேறானவர் அல்லர் ஒருவரே என்ற