பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 பதினெண் புராணங்கள் சொல்லிக் கொடுத்தார். உடனே முனிவர்களும், தேவர்களும் அதைப்பற்றித் தங்களுக்கும் சொல்ல வேண்டும் என்று விரும்பிக் கேட்க, விஷ்ணுவும் அவர்களுக்காக மறுமுறை கூற ஆரம்பித்தார். ஞான மார்க்கத்தைப் பற்றிக் கூறும் பொழுது விஷ்ணு ஆமையாக உருவம் பெற்றிருந்ததால், அவர் கூறிய தெய்விக வார்த்தைகள் கூர்ம புராணம் என்று பெயர் பெற்றது. மூலப் பரம்பொருளின் இருப்பையும், இயல்பையும் நன்கு அறிந்து கொண்டபின், அதனுடைய வியாபகத்தை அறிய வேண்டும். இம்மூன்றையும் அறிந்த பிறகு நூல்களில் சொல்லப்பட்டபடி நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து தர்மத்தைக் கடைப்பிடித்து, அதிலிருந்து வழுவாமல் வாழ வேண்டும். ஒடுக்கப்பட்டவற்றை, வாழ்வில் இருந்து ஒதுக்கி, அண்ட முழுவதும் வியாபித்து இருக்கின்ற மூலப் பொருள் களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிய வேண்டும். உலகமும் அதில் காணப்படும் பொருள்களும் மாயை என்றே நன்கறிய வேண்டும். இவ்வாறு செய்தால், அனைத்தையும் ஆட்டிப் படைக்கின்ற பரம்பொருளின் இயல்பை ஒருவாறு உணரமுடியும். - பிராமணனே! நான் சொல்லியபடி தியானம் என்பதை மூன்று வகையாகப் பிரித்து உணர வேண்டும். இதில் முதல் வகை என்னையே வழிபடு பொருளாகக் கொண்டு தியானிப்ப தாகும். இரண்டாவது வகை அருவமாக உள்ள பரம் பொருளை தியானிப்பதாகும். மூன்றாவது தியானம், பிராமி எனப்படும் முக்குணங்களையும் கடந்ததை தியானிப்பதாகும். ஆன்மிகத் துறையில் வளரும் ஒருவன் மேலே சொல்லிய மூன்றில் ஒருவகை தியானத்தை மேற்கொள்ள வேண்டும். மனத் திடம் இல்லாதவர்களே முதல்வகை தியானத்தை மேற்கொள்ள வேண்டும். உலக பந்த பாசங்களினின்று நீங்கி, மனித முயற்சி அனைத்தையும் இந்த ஒரே துறையில் செலுத்தி,