பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/671

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கூர்ம புராணம் 643 துர்ஜயா நடந்ததைக் கூறிவிட்டான். உடனே அவன் மனைவி "கட்டிய மனைவி இருக்கும் பொழுது வேறு ஒருத்தியுடன் வாழ்ந்த நீங்கள் பெரும் பாவம் செய்து விட்டீர்கள். அந்தப் பாவம் போக, எங்கேயாவது சென்று தவம் செய்யுங்கள்” என்று புத்தி கூறினாள். அதைக் கேட்ட துர்ஜயன், கன்வ முனிவரை அணுகித் தான் எவ்வாறு தவம் செய்ய வேண்டும் என்று கேட்டான். முனிவர், அவன் இமயமலை சென்று தவம் இயற்ற வேண்டும் என்று கூறினார். துர்ஜயன் இமயமலை செல்லும் வழியில் ஒரு கந்தர்வன் அழகிய மாலை ஒன்றை அணிந்து கொண்டு எதிரே வருவதைப் பார்த்தான். அந்த மாலையைக் கண்டவுடன் துர்ஜயனுக்கு ஊர்வசி நினைவு வர, ஊர்வசிக்கு அந்த மாலையைப் பரிசளிக்க நினைத்தான். உடனே அந்தக் கந்தர்வ னிடம் போரிட்டு அவனைத் தோற்கடித்து அந்த மாலையை எடுத்துக் கொண்டு தான் ஊர்வசியோடு வாழ்ந்த காளிந்தி நதிக்கரைக்குச் சென்றான். அவளை அங்குக் காணாமையால் பல இடங்களில் தேடிக் கடைசியாக மானசரோவர் ஏரிக் கரைக்கு வந்தான். அங்கு ஊர்வசியைக் கண்டு, மாலையைப் பரிசாகத் தந்தான். நடந்தவற்றைக் கேள்விப்பட்ட ஊர்வசி, ‘அரசே! நீங்கள் தவம் செய்யப்போவதுதான் சரி. இல்லா விட்டால் உங்கள் மனைவியின் சாபம், கன்வ முனிவரின் சாபம் ஆகிய இரண்டு சாபங்களும் நம் இருவரையும் அழித்து விடும். ஆகவே உடனே காட்டுக்குப் போங்கள் என்றாள். அவளை விட்டுப் போக மனமில்லாத துர்ஜயன் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டான். தன் அழகுதான் அவனை மறக்க முடியாமல் செய்கிறது என்பதை அறிந்த ஊர்வசி, தன் அழகை மாற்றிக் கொண்டு குரூர வடிவத்துடன் காட்சி தந்தாள். அழகற்ற அவளைக் காணச் சகியாத துர்ஜயன் உடனே அவளை விட்டு நீங்கி இமயம் சென்று இருபத்து நான்கு