பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 651 தொட்டுக் கொண்டு ஒரு ஒளிப்பிழம்பு தோன்றியது. அந்த ஒளிப்பிழம்பின் இடையே கோடி சூரியப் பிரகாசத்துடன் மற்றோர் ஒளிப்பிழம்பு காட்சி அளித்தது. இவ்வாறு நின்ற வடிவம் அனைத்திற்கும் மேம்பட்டவனும், கையில் சூலத்தை உடையவனும், பாம்பைப் பூணுலாக அணிந்தவனும், நீல லோகிதன் என்ற பெயரை உடையவனும் ஆகிய சங்கரனே ஆகும். இந்த வடிவத்தைக் கண்ட பிரம்மன், 'ஓ, சங்கரா! ஒரு காலத்தில் என் நெற்றியிலிருந்து பிறந்தவன் தானே நீ. இப்பொழுது என்னுள் அடைக்கலம் புகுந்து கொள்” என்று கூறினான். ஆணவமே வடிவான இந்த வார்த்தைகளைக் கேட்ட வுடன் சங்கரனிடம் இருந்து காலபைரவ மூர்த்தி என்றொருவர் தோன்றினார். கையில் திரிசூலத்துடன் தோன்றிய அவர், அகம்பாவம் கொண்ட பிரம்மனுடன் போர் புரிந்தார். இறுதியாக அவருடைய ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்து விட்டார். சம்பு என்ற பெயர் படைத்த சங்கரன் கால பைரவ வடிவத்தில் பிரம்மன் தலையைக் கொய்தவுடன், பிரம்மன் இறந்து விட்டார். ஆனால், ஈசன் என்ற பெயருடைய சங்கரன், தன் யோக சக்தியால், பிரம்மனை மறுபடியும் பிழைக்கச் செய்து விட்டார். உயிர் பெற்ற பிரம்மன், ஈசானன் ஆகிய சிவன் தன் சக்தியுடன் கூடி அந்த ஒளிப்பிழம்பிற்கு அப்பால் இருப்பதைக் கண்டான். காலசர்ப்பத்தை கையில் அணிந்த வனாய், புலித் தோலை இடையில் கட்டியவனாய், கோடி சூரியப் பிரகாசம் உடையவனாய் தன் சடைக்கு அழகு செய்யும் வகையில் பிறைச் சந்திரனைச் சூடியவனாய், திரிசூலத்தைக் கையில் ஏந்தியவனாய் இருக்கும், ஈசானன் எனப்படும் மகாதேவனை பிரம்மனால் காண முடிந்தது. பிரம்ம தேவனின் கபாலம் கால பைரவனின் கையில் ஒட்டிக் கொண்டு விழ மறுத்து விட்டது. அந்தக் கபாலத்துடன்