பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 39 உனக்குத் தந்து விடுகிறேன். நான் சொல்வதுதான் சரி என்றால் உன் பங்குக்குரிய செல்வம் முழுவதையும் எனக்குத் தந்துவிடவேண்டும்” என்றான். அப்பாவியாகிய மணி குண்டலன் அதற்குச் சம்மதித்தான். வழியில் போவோர்களைச் சந்தித்துக் கேட்டார்கள். அறிவில்லாத அந்தச் சாதாரண மக்கள் கெளதமன் சொல்வதுதான் சரி என்றனர். மணிகுண்டலன் பங்கு முழுவதும் கெளதமனுக்குப் போய்விட்டது. மறுபடியும் வியாபாரம் நடந்தது. மணிகுண்டலன் தான் சொன்னதையே சொன்னான். இரண்டாம் முறை பந்தயம் கட்டி மணி குண்டலன் கருத்தை யாரும் பேசாததால் கெளதமன் அவன் கைகளை வெட்டி எறிந்தான். அந்நிலையிலும் மணிகுண்டலன் தர்மத்தின் சிறப்பைப் பேசிக் கொண்டிருந்தான். அவனை ஒழித்துவிட எண்ணிய கெளதமன், மறுபடியும் பந்தயம் கட்டி தான் ஜெயித்தவுடன் மணிகுண்டலனின் இருகண்களையும் பிடுங்கி விட்டான். அப்பொழுதும் மணிகுண்டலன் தன் கொள்கையினின்று மாறவே இல்லை. தர்மம்தான் சிறந்தது. அது இறுதியில் வெல்லும் என்று சொல்லிக் கொண்டு எங்கெங்கோ அலைந்து கங்கைக் கரையில் உள்ள விஷ்ணுவின் சிலைக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தான். அங்கேயே படுத்தும் விட்டான். நடு இரவில் இலங்கையில் இருந்து விபீஷணனும் அவன் காவலர்களும் இந்த விஷ்ணுவின் சிலைக்கு பூஜை செய்ய வந்தனர். அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண் டிருந்த விபீடணனின் மகன், கண்ணிழந்த மணிகுண்டலனைப் பார்த்து அவன் வரலாறு முழுவதையும் தெரிந்து கொண்டான். அவன் சோகக் கதையைத் தந்தையாகிய விபீடணனிடம் சொன்னான். அப்போது வீடணன், "மகனே! இராமஇராவண யுத்தத்தின்போது அனுமன் மருத்து மலையினைக் கொண்டு வந்தான். திருப்பி அம்மலையை அனுமன் எடுத்துச் செல்லும்போது அதி அற்புதம் வாய்ந்த விஷல்யகரணி என்ற