பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 பதினெண் புராணங்கள் மரத்தின் ஒரு பகுதி இங்கு விழுந்துவிட்டது. அதைத் தேடிப் பார்க்கலாம் என்று சொல்லித் தேடி, இறுதியில் அது பெரிய மரமாக வளர்ந்திருப்பதைக் கண்டார்கள். அதில் ஒரு சிறு கிளையை உடைத்து வந்து மணிகுண்டலன்மேல் போட்டவுடன் இழந்த கை, கண்கள் ஆகியவை பெற்று முழுவடிவுடன் விளங்கினான். ஒரு சிறிய நாட்டில் ஆட்சி செய்த அரசனுடைய ஒரே மகள் கண்களை இழந்து சோகத்தில் மூழ்கி இருந்தாள். தம் மகளின் கண்களை யார் சரி செய்கிறார்களோ அவர்கள் அவளைத் திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டையும் ஆளலாம் என்று கூறியிருந்தார் அந்த அரசர். இதை அறிந்த மணிகுண்டலன் தனக்குத் தெரிந்த மருந்துச் செடியின் உதவியால் அரசகுமாரியின் இழந்த கண்களைப் பெறுமாறு செய்து, அவளைத் திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டை ஆண்டான். சில காலம் கழித்து காவலர்கள் ஒருவனைக் கொண்டுவந்து அவன்முன் நிறுத்தினர். அவன் வேறு யாருமல்ல, தீய வழியில் சென்று மணிகுண்டலன் பொருட் களையும் அபகரித்துக் கொண்டு அவனையும் கொல்ல நினைத்த கெளதமன் என்ற பிராமணனே ஆவான். மணி குண்டலன் அவனை அடையாளம் தெரிந்து கொண்டு அவனை மன்னித்து வேண்டுமான திரவியங்களும் தந்தான். தருமம் இறுதியில் வென்றது. ஏகாதசி மகிமை அவந்தி நகரத்தின் எல்லைக்கப்பால் பிரஷ்டம் செய்யப் பட்ட சண்டாளன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவந்தி நகரைச் சுற்றி ஒடும் சிர்பா நதியின் கரையில் ஒரு விஷ்ணு ஆலயம் இருந்தது. இந்தச் சண்டாளன் மிகப் பெரிய விஷ்ணு பக்தன். ஏகாதசி அன்றைக்கு முழுப்பட்டினி இருந்து அன்று இரவு