பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் - - 677 வருத்தமடைந்த கச்சன், தேவையில்லாமல் என்னை நீ சபித்தாய். நானும் உன்னைச் சபிக்கிறேன். "எந்த பிராமணனும் உன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டான். எக்காலத்தும் நீ விரும்பிய பொருளை அடைய மாட்டாய்” என்று சாபமிட்டான். லோமஹர்ஷனரிடம் புராணம் கேட்டுக் கொண்டிருந்த முனிவர்கள், அவரிடம் “சுக்கிராச்சாரிக்கு மிருத்யுசஞ்சீவினி மந்திரம் தெரியும் என்று சொன்னீர்கள். ஆனால் அவர் எப்படி, எப்பொழுது அந்த மந்திரத்தைத் தெரிந்துகொண்டார் என்பதைக் கூறவில்லையே” என்று கேட்க, லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடைவிடாது நடந்த யுத்தத்தில் அசுரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அந்த நிலையில் சுக்கிராச்சாரியார் அவர்களைப் பார்த்து, “கவலையை விடுங்கள். நான் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து புதிய ஆற்றலைப் பெற்று வருகிறேன். அதுவரை நீங்கள் தேவருடன் சண்டை போட வேண்டாம். உங்கள் ஆயுதங்களை எல்லாம் கட்டி வைத்துவிட்டு, என் தந்தையாகிய பிருகு முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று அமைதியாக இருங்கள்” என்று கூறிவிட்டு, சிவனை நோக்கித் தவம் செய்யச் சென்றார். சிவன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, இறந்தவரை எழுப்பும் வித்தை தமக்குத் தெரிய வேண்டும் என்று சுக்கிராச்சாரி கேட்டார். சிவன், “அது அவ்வளவு எளிதன்று. புகையை மட்டும் உட்கொண்டு ஒராயிரம் வருடங்கள் தவம் செய்வாயே ஆனால் இது சித்தியாகும்" என்றார். அதற்குள் சுக்கிராச்சாரியார் எதற்காகத் தவம் செய்கிறார் என்ற செய்தி தேவர்களுக்குத் தெரிய வந்தது. அசுரர்கள் பயந்து ஒடுங்கி, பிருகுவின் ஆசிரமத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அவர்களுடன் சண்டை