பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 பதினெண் புராணங்கள் யிடத் தயாராயினர். பிரகஸ்பதிக்குக் கூடத் தெரியாத மந்திரத்தை சுக்கிராச்சாரி தெரிந்து கொள்ளப் போயிருக்கிறார் என்பதை அறிந்த இந்திரன் தன் மகள் ஜெயந்தியை சுக்கிராச்சாரியிடம் அனுப்பி அவர் தவத்தைக் கலைக்க ஏற்பாடு செய்தான். அவள் வந்து ஆயிரம் ஆண்டுகள் சுக்கிராச்சாரிக்குத் தொண்டு செய்து கொண்டிருந்தாள். இதனிடையில் தேவர்கள் அசுரர்கள் மேல் போர் தொடுத்தனர். நிராயுதபாணிகளாய் முனிவரிடம் தங்கி இருக்கும் தங்களிடம் போரிடுவது தவறு என்று அசுரர்கள் சொல்லியும் தேவர்கள் அதனைச் சட்டை செய்யவில்லை. அஞ்சிய அசுரர்கள் சுக்கிராச்சாரியின் தாயிடம் வந்து புகல் வேண்டினர். அந்த அம்மையார், நீங்கள் அஞ்ச வேண்டா. நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறி தம் ஆற்றலைப் பயன்படுத்தி, இந்திரனை ஒரே இடத்தில் அசைய முடியாமல் நிற்கச் செய்து விட்டார். இந்திரன் பரிதாபமாக நிற்பதைக் கண்ட தேவர்கள் ஒடி ஒளிந்தனர். இந்திரன் நிற்பதைப் பார்த்த விஷ்ணு அவனிடம் வந்து நீ என்னுள் புகுந்து கொள். நான் உன்னை பத்திரமாக அழைத்துச் செல்கிறேன் என்று கூற, இந்திரன், அசையவே முடியாத நான் உன்னிடம் எப்படி வருவது என்று கேட்க, அதோ சுக்கிராச்சாரியின் தாய் நிற்கிறாள். அவளைக் கொன்றுவிடுங்கள் என்று கூற, விஷ்ணு தன் சக்கரத்தால் அத்தாயின் கழுத்தை அறுத்து விட்டார். இது நடைபெறும் பொழுது பிருகு முனிவர் ஆசிரமத்தில் இல்லை. அவர் மீண்டும் ஆசிரமம் வந்தபொழுது நடந்ததை அறிந்து கொண்டார். தம் மாபெரும் ஆற்றலைப் பயன் படுத்தி, "விஷ்ணுவே! நீ பூலோகத்தில் பல பிறப்புக்கள் மானுடனாகப் பிறந்து உழல்வீராக” என்று சபித்தார். அதே ஆற்றலைப் பயன்படுத்தித் தம் மனைவியின் உயிரையும் மீட்டார்.