பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பதினெண் புராணங்கள் கொண்டான். அவன் மேல் இரக்கம் கொண்ட சண்டாளன் ஒரு ஏகாதசி புண்ணியத்தில் இரண்டு. மணி நேரப் பங்கை அவனுக்குத் தந்து அந்த இழிபிறவியிலிருந்து விடுதலை அடையச் செய்தான். இந்தச் சண்டாளன் மேற்கொண்ட தீர்த்த யாத்திரையின் போது தன் பழம்பிறப்பை உணர்ந்தான். துறவியாக ஆசிரம வாழ்க்கை நடத்தும் பொழுது பிச்சை ஏற்றுக் கொண்டு வந்த உணவில் மண் விழுந்து விட்டது என்பதற்காக அந்த உணவைத் துக்கி எறிந்து விட்டான். அதன் காரணமாகவே இப்பொழுது சண்டாளனாகப் பிறந்தான். அதன்பிறகு தீர்த்த யாத்திரை சென்று மன்னிப்புப் பெற்றான். பிரம்ம புராணத்தின் பிற்பகுதி, யோகம் என்பது பற்றியும் அது செய்யப்பட வேண்டிய முறை பற்றியும் விரிவாகப் பேசுகிறது. கதையைத் தொடங்கியபடியே நைமிசாரண்யவனத்தில் உரோமஹர்ஷனர் இக்கதையை முடித்தார் என்று இப்புராணம் முடிகிறது.