பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 பதினெண் புராணங்கள் நல்ல இடம். செடி கருகிப் போனால் வேறு இடம் தேட வேண்டும். மனையில் ஒரு சதுரமான படம் வரைய வேண்டும். அதற்குள் ஒரே அளவிலான எண்பத்தோரு சதுரங்கள் வரையப்பட வேண்டும். ஒவ்வொரு சதுரத்திலும் ஒரு குறிப்பிட்ட தேவனை வணங்க வேண்டும். ஒரு வீட்டிற்கு நான்குபுறமும் கதவுகள் இருக்குமானால் அவ்வீடு சர்வ தபோ பாத்ர என்று வழங்கப்படும். ஒரு சாதாரண மக்கள் குடியிருக்கும் வீடு ஒரு முழம் நீளம் இருக்க வேண்டும். வீட்டின் முன்புறம் மரங்கள் இருக்கக் கூடாது. வீடு கட்டும்பொழுது மரவேலைக்காகத் தேர்ந்தெடுக்கப் படும் மரங்களை கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். பறவைகள் வீடு கட்டியிருக்கும் மரங்களை வெட்டக் கூடாது. சில குறிப்பிட்ட மரங்களைப் பயன் படுத்தக் கூடாது. இடி விழுந்த மரங்களைப் பயன்படுத்தக் கூடாது. சுடுகாட்டில் உள்ள மரங்கள், கோயிலைச் சுற்றி உள்ள மரங்கள், இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள மரங்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. வேப்பமரம், மாமரம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. சிவனுடைய விக்கிரகம் செய்யும் பொழுது, சிவனது சந்திரன் அமைக்கப்பட வேண்டும். சிவனுக்கு வயது பதினாறு என்பது போல் தோற்றமளிக்க வேண்டும். புலித்தோல் ஆடையாகவும், பாம்புகளை மாலையாகவும் அணிந்திருக்க வேண்டும். மயிலிறகு ஒரு காதினை அழகுபடுத்த வேண்டும். திரிசூலம், தண்டம், வேல் முதலியவை வலப்புறத்திலேயே இருக்க வேண்டும். கபாலம், பாம்பு, வாள் முதலியவை இடப்பக்கம் வைக்கப்பட வேண்டும். எருதின் மீது அமர்ந்து இருப்பதுபோல் விக்கிரகம் அமைத்தால், சிவனுக்கு இரு கைகள் இருக்க வேண்டும். சிவன் நடனம் ஆடுவதுபோல்