பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பதினெண் புராணங்கள் நேரில் வந்தவுடன் என் அண்ணனின் உயிரைத் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அப்படியே அண்ணன் பிழைத்தவுடன் இருவருமாகச் சென்று தந்தையை வணங்கி நின்றனர். மகிழ்ச்சியடைந்த சிவசர்மா, நான்காவது மகனாகிய விஷ்ணுசர்மாவை அழைத்து, நீ இந்திர லோகம் சென்று இந்திரனிடம் கொஞ்சம் அமிர்தத்தை வாங்கி வா என்றார். விஷ்ணுசர்மா இந்திரலோகம் சென்று அமிர்தத்தைத் தேடுகையில் இவனுடைய எண்ணத்தை மாற்ற முயன்று இந்திரன் மேனகையை அவனிடம் அனுப்பினான். மேனகை அவனை மயக்கி, நாம் இருவரும் மணம் செய்துகொண்டால் மிகச் சிறப்பான இன்பத்தைத் தருவேன்' என்று கூறினாள். விஷ்ணுசர்மா அதற்கு இசையாமல் போகவே, துர்த்தேவதை களை அனுப்பி விஷ்ணுசர்மாவைக் கலைக்க முயன்றான். அதற்கும் விஷ்ணுசர்மா மசியவில்லை என்றவுடன், தேவேந்திரன் ஒரு பாத்திரத்தில் அமிர்தத்தைக் கொடுத்தார். விஷ்ணுசர்மாவும் அந்த அமிர்தத்தைக் கொண்டுவந்து சிவசர்மாவிடம் கொடுத்தான். மகிழ்ந்த சிவசர்மா இந்த நான்கு பிள்ளைகளையும் நேரே விஷ்ணுலோகம் போகுமாறு அனுப்பி வைத்தார். எஞ்சியிருக்கும் ஐந்தாவது பிள்ளையான சோமசர்மாவை அழைத்து, “நானும் உன் தாயாரும் தீர்த்தயாத்திரை போகிறோம். அதுவரை இந்த அமிர்தத்தை கவனமாகப் பாதுகாத்து வைத்திரு” என்று கூறிவிட்டு, அமிர்தத்தை அவனிடம் கொடுத்துவிட்டுப் போனார். சிலகாலம் கழித்து சிவசர்மாவும், அவன் மனைவியும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட உடம்புடன் சோமசர்மாவிடம் வந்து சேர்ந்தனர். அவன் முகம் சுளிக்காமல் அவர்களுக்குப் பணிவிடை செய்தான். சிவசர்மா தேவை இல்லாமல் கோபித்துக் கொண்டு சோமசர்மாவை வாயில் வந்தபடி ஏசினார்.