பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்ட மாண்புமிகு வெற்றிச்சிறப்பையும், அவன், நெடுமிடல்அஞ்சி என்பானின் கொடுமிடலைச்சாய்த்து, அவன் வளநாட்டைக் கவர்ந்துகொண்ட களங்காய்க்கண்ணியானின் கொற்றத்தையும் அறிந்து பாராட்டியுள்ளார். வண்டன் என்பவன், வரையாது வழங்கும் வள்ளல் ஆவன்; அவன்பால், அவ்வாறு வழங்குதற்கேற்ற விழுநிதியும் குவிந்து கிடந்தது; நார்முடிச்சேரல், வளத்திலும், வழங்கும்.குணத்திலும் அவ்வண்டன் அ னை ய ன் எனச், சேரனின் சிறப்புரைக்கும் நிலையிலேயே, பிறிதொரு வரலாற்றுண்மையினையும் விளக்கும் விதம், வியந்து பாராட்டற்கு உரித்து.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் நல்லியல்புகள் பலவற்றையும் பாடிப்புகழ்ந்த புலவர் காப்பியனர், அவன் அப்பெயர் பெறுதற்குக் காரணமாய் விளங்கிய நார்முடியின் அமைப்பியலே அழகுற எடுத்துக்காட்டியிருக்கும் திறத்தின் அருமையே அருமை விளிம்பில் மணிகள் இழைக்கப்பெற்ற ஒரு பொற்கூடு. நார் கொண்டு பின்னப்பட்டுள்ளது அதன் மேற்புறம். புள்ளிகள் நிறைந்த கழுத்தும், சிறிய உடலும் வாய்ந்த அழகிய புருக்கூட்டம், வேடர் தம்மைப்பிடிக்க விரித்து வைத்திருக்கும் வலையோ,எனக், கண்டுஅஞ்சுமாறு, இலை உதிர்ந்த வேலமரக்கிளைகளில், சிலந்தி தன்வாய் நீரால் பின்னிவைத்திருக்கும் வலையை நினைப்பூட்டும், பொற்கூட்டின் மேற்புரம் மறையுமாறு பின்னிக்கிடக்கும் நாரின்தோற்றம். பேரொளி வீசும் பருமுத்து வடங்கள், அந். நாரின்மீது கி. ட ந் து அ ணரி த ந் து நிற்கும், களங்காய்க்கண்ணியான் அணிந்திருக்கும் நார்முடியின், புலவர் காட்டும் நற்காட்சி இது. -

வாலிதின், நூலின் இழையா நுண்மயிர் இழைய, பொறித்த போலும் புள்ளி எருத்தின்

4