பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி நல்கும், மணம் நாறும் துளசியைக் கொத்துக் கொத்தாக வைத்துத் தொடுத்த வண்டுகள் வந்து மொய்க்குமளவு புதுமை நலம் வாய்ந்த, மாலையின் மாண்பை. யும், கையில் ஏந்தியிருக்கும், காண்பவர் கண்ணுெளியைக் கெடுக்குமளவு பேரொளிகாலும் ஆழிப்படையையும் கண்டு களிகூர்ந்து, அப்பெருமான் திருவடியில் வீழ்ந்து வணங்கி, அவன் புகழ்பாடி மனம் நிறைவுற்று மகிழ்வாராயினர். பத்ம. நாபப்பெருமானையும் வழிபட்டு, அப்பெருமான் பெருமை பாடும் திருக்கோயில் காட்சிகளையும் கண்டு வெளிப்பட்டு, தாம் போகும் வழிமேற்கொண்டார் புலவர்.

சேரநாட்டுப் பெருவழிகளில் சென்று கொண்டிருந்த புலவர், அப்பெருவழிகளில் திருவனந்தபுரப்பெருமான வழி, பட்டு வருவாரும், வழிபடச் செல்வாரும் ஆகிய மக்கட்கூட்டம் மண்டியிருப்பதைக்கண்டார். அம்மக்கள்திரள், இரவென்றும் பகல் என்றும் பாராமல், வழிநடை வருத்தம் தேன்ருமல் செல்வதற்குத் துணைபுரியும் வகையில், முழுத்திங்கள் காரிருள் போக்கிப் பேரொளி பரப்பிக் காய்ந்துகொண்டிருந்தான்். அதுகண்டு, வழிச்செல்வார்க்கு விழுத்துணைபுரியும் அவ்வெண்மதியை அவர்வாய் வாழ்த்திற்ருக, அந்நிலையில் ஆங்கு அவரோடு அவ்வழியைக் கடந்து செல்வார்சிலர், 'பெரியீர்! இப்பெருவழிகளில் மக்கள் வழங்குவதை முழுமதி நாட்களில் மட்டுமேதான்் காணலாகும் போலும் என்று கருதன்மின்; வழிநடைக்கு, நிலவொளியை எதிர்நோக்கி நி ற் கு ம் நிலை, களங்காய்க்கண்ணிநார்முடிச் சேரலாம் நல்லோன் நாடாளும் இச்சேர நாட்டவர்க்கு எந்நாளும் நேர்ந்ததில்லை. அவன் ஆட்சித் திறத்தால், ஆ ற லை க் கு ம் கள்வர் அறவே இல்லாயினர்; பெருவழிகளை அவன் பேணிவைத்திருக்கும் சிறப்பால், அவ்வழிகளில் அரவும் புலியும் போலும் கொலே. வல்ல, கொடிய உயிர்களைக் காண்பது இயலாது. அதல்ை.

12