பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிருந்து, தலைமேல் குவிந்த கையினராயப் பாடிப் பரவும் ஆரவாரம். நால்வேறு மாதிரத்து நனந்தலை = நான்காக வேறுபட்ட திசைகளாகிய பரந்த நிலம் முழுவதும். ஒருங்கு எழுந்து ஒலிப்ப = ஒன்ருகத்திரண்டு எழுந்த ஒலிக்க. தென் உயர் வடிமணி எறியுநர் - தெளிந்த ஓசையும், சிறந்த தொழில்வளம் அமைந்த மணிகளை இயக்குபவர். கல்லெண் = கல்லென ஒசை எழுமாறு இயக்க. உண்ணுப் பைஞ்ஞலம் : உண்ணுநோன்பு மேற்கொண்ட உலகத்து உயர்ந்தோர். பனித்துறை மண்ணி - குளிர்ந்த தண்ணிர்த் துறைகளில் நீராடி. வண்டு ஊது பொலிதார் = வண்டுகள் வந்து மொய்க்குமளவு புதுமையும் பொலிவும் வாய்ந்த மலர்களால் ஆன மாலையும், திருளுெமர் அகலத்து = திருமகள் விரும்பி வீற்றிருக்கும் மார்பும். கண்பொருதிகிரி = காண்பவர் கண்ணுெளி கெடுக்கவல்ல பேரொளிகாலும் ஆழிப்படையும். கமழ் குரல் துழாய் அலங்கல் = மணங்கமழும் கொத்தாகிய துளசியாலான மாலையும் உடைய. செல்வன் சேவடி பரவி : திருவனந்தபுரத்துப் பெருமான் திருவடிகளை வணங்கி வாழ்த்தி. நெஞ்சுமலி உவகையர் = மனம் நிறைந்த மகிழ்ச்சி உடையராய். துஞ்சு பதி பெயர=தத்தம் வாழிடங்கட்குத் திரும்பிச் செல்ல. கோடுகூடு மதியம் = இருபக்கமும் நிரம்பிய முழுத்திங்கள். மணிநிற மை இருள்அகல் = நீல மணியின் நிறம் போலும் கரிய இருள் அகலுமாறு. நிலாவிரிபு இயலுற்ருங்கு=நிலவைப்பொழிந்து உலாவருதல் போல். துளங்கு குடி விழுத்திணை திருத்தி = தளர்ந்த குடிகளின் தளர்ச்சியைப் போ க் கி, அவர்தம் சிறந்த ஒழுக்கத்தைச் செம்மையுறப் பண்ணி. முரசு கொண்டு= பகைவர்களின் போர் முரசு முதலாம் அரசவிருதுகளைக் கைக்கொண்டு, ஆண்கடன் இறுத்த = ஓர் ஆடவன் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்த நின் பூண் கிளர் வியன் மார்பு - பொன்ஞரம்பூண்ட உன் அகன்ற மார்பு.

19