பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யற்றுப் போகாது என்றென்றும் தொடர்ந்து நடைபெற, வேண்டுமாயின், வழங்குவது ஒருபால் நிகழ, அவ்வளத்தைப் பெருக்கும் பணியும் பிறிதொருபால் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே யிருக்க வேண்டும் என நினைந்தான்். அதற்காகப் பெரும்பொருள் ஒன்றே பெற்று, பிற பண் பு எதுவும் பெருமையால் தன்னைப்பகைத்து வாழ்பவரை வெற்றிக்கொண்டால், வீரத்தால் பெறலாகும் பெரும்புகழைப் பெற்றது போலவும் ஆகும், பெரும்பொருள் வளத்தைப் பெருக்கியது போலவும் ஆகும்என உணர்ந்தமையால், அப்பகைவர்கள்மீது ஒயாது போர் மேற்சென்று, அவர்க்குத் தொலையாப் பெருந்துன்பத்தை அளித்துவிட்டு, அவர் உடைமைகளைக் கொணர்ந்து தன் கோயிற்பண்டாரத்தைப் பெருக்கிக் கொள்வானுயினுன்.

வளத்தைப் பெருக்கினன்; வளத்தோடு வீரத்தால் பெறலாகும் புகழும் வந்தடைந்தது; பெற்ற பெரும்பொருளைத் தனக்கெனப் பேணிக்கொள்ளாது வருவார்க்கு வழங்கினுன் : வள்ளல் என வாழ்த்திற்று உலகம், இவ்விரண்டாலாம் பெரும்புகழ் தன்னே வந்தடைந்தது என்ருலும், அதுவே தன்னைச் சிறந்தவனுக்கிவிடாது; ஒ ரு வ ன் பால் வீரம் இருந்தது; அதைப் பயன் கொண்டு பெரும்பொருள் ஈட்டினன். தன் தேவைக்கு ேம லு ம் வந்து குவிந்து விட்டமையால் வேண்டுவார்க்கு வழங்கினன். ஆக இவ்விரு செயலாலும் ஒரு பெரும்புகழ் உண்டாகிவிடாது என்றே உலகம் கூறும்; ஆகவே, இப்புகழோடு பண்புடைமையும் தன்பால் வந்து பொருந்தவேண்டும்; அந்நிலையிலேயே பெரியார்கள் தன்னைப் புகழ் ந் து வாழ்த்துவர் என உணர்ந்தான்்; கற்பன அனைத்தும் கற்றுக் கல்விக்கரைகண்டான்; பணியும் என்றும் பெருமை; வளையும் வேய் நிமிரும் என்ற பேருண்மை வழிநின்று பெரியோர்களைப்