பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னுட்டுக் குடிமக்களின் தளர்ச்சியைப் போக்கி, வெற்றி கண்ட வேந்தளும் நார்முடிச்சேரலாதன் மற்றொரு பேருண்மை யையும் உணர்ந்து மேற்கொண்டு வாழ்ந்தான்்.

தன் நாட்டவர் தளர்ந்த நிலையினராதல் கூடாது என உணர்ந்து, அவர் தளர்ச்சி போக்கும் தறுகளுளளுய் நாடாண்டிருந்த அந்நல்லோன், அக்குடிமக்கள் அவ்வாறு தளர்ந்து போவதற்காம் காரணத்தைக் கண்டு, அதைத் தீர்க்காது, அவர் தளர்ச்சியைத் தீர்ப்பது என்றால், அத்தொண்டு தொடர்ந்து நடைபெற வேண்டியதாகிவிடும். ஆகவே, அவர் தளர்ச்சியை ஒருமுறை தீர்த்துவிட்டு, மீண்டும் அவர்கள் தளர்ந்து போகாமைக்கு வழி வகுக்க வேண்டும் என்பதை உணர்ந்தான்். நாடும், வளம் நிறைந்தது; நாட்டில் நிலவும் அரசும் நல்லரசு; நாட்டவரும் நல்லவர் ஆக, நாட்டவர், தாமே தளர்ந்து விடுதல் இயலாது; அவரைத் தளர்ந்த நிலையினராக்கும் அப்பணியைப் புரிவார், பிற நாட்டவரே ஆதல் வேண்டும்; பிறநாட்டு மன்னர்கள், தங்கள் படையில் பணிபுரியும் படை மறவர் உள்ளத்தில் இந்நாட்டைப் பற்றியும், இந்நாட்டு மன்னன், மக்கள் ஆகியோரைப்பற்றியும் பிழைபடு எண்ணங்களைப் புகுத்திப் பெரும்பகையுணர்வை வ ள ர் த் து வி ட் டு இருக்கிருர்கள்; அப்படை மறவர்கள், அப்பகையுணர்வு மிகுதியால், உண்மை நிலையிலிருந்து பிறழ்ந்து இந்நாட்டின் மீது மாரு வஞ்சம் பூண்டு வாழ்கின்றார்கள்; அதல்ை இந்நாட்டின் மீது ஒயாப் போர்மேற்கொண்டு, இந்நாட்டு மக்களுக்குத் தொல்லை.பல தருகின்றனர். அவர் தொல்லைக்கு உள்ளாகி இந்நாட்டவர் தளர்ந்து நிலைகெடுகின்றனர்; ஆகவே இவர்தளர்ச்சி போக வேண்டுமாயின், பகைநாட்டுப் படை மறவர்களின் பகையுணர்ச்சி மாறவேண்டும்; அதுதான்கவே மாருது; அதை மாற்ற வேண்டும்; மாற்ற வேண்டுமாயின், தன்படையால்

58