பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயலாகவும், மான் முதலாம் சில சிற்றறிவுயிர்கள் அதன் வரவுகண்டு அஞ்சி நடுங்குவதுபோல், செங்குட்டுவன் பேரரசு, பார் உலகை வாழ்விக்க உதவுவதாகவும், அவைேடு நட்பு கொண்டு நாடாளும் நல்லறிவு வாய்க்கப்பெருத சிற்றரசர்கள், அவன் பெருக்கம் கண்டு கலங்குவராயினர். வழியிடைப் பொருள்களையெல்லாம் வாரிக் கொண்டு வரும் காவிரி, தன் னளவிலேயே வளமுடையதாகவும், முக்கூடற்கண், ஆன் பொருநை, குடவறுை எனும் வேறு ஆறுகளையும் தோழமை யாக்கொண்டு ஒன்றுகலந்த நிலைக்கண், தன் வளத்தோடு, அவை கொணர்ந்த வளங்களும் தலைமயங்க, அளவிறந்த வளம் உடையதாதல்போல், வேழ வளம்மிக்க சேரநாடு உடைமையால் மலைபடு செல்வத்தால் மாண்புற்ற செங் குட்டுவனும், கடல்பிறக் கோட்டிக் கடம்பரை வென்று, கடல் படு செல்வமும், சோற்றுவளம் செறிந்த சோழநாடு வென்று மருத நிலவளமும் மல்கப் பெற்று, முக்கூடல் காட்சிபோல் கவினுற விளங்கின்ை.

காவிரிக் காட்சியைச் செங்குட்டுவன்பால் கண்டுகளித்த புலவர், அவன் நாற்படைக் காட்சியிலும் அக்காவிரிப் பெருக்கின் காட்சியையே கண்டார். கொல்லும் சினம் உடையவாகிக் கொதித்து எழும் அவன் களிற்றுப் படைகள், பொங்கி எழும் பேரலைகளாக, அக்களிறுகன் மீது அமர்ந்து செல்லும் வீரர்கள் ஏந்திய விற்படைகள், ஒளிவிட்டு மின்னுவது, அலைகள் தலைமடங்கத் தெறிக்கும் வெண்ணிற நீர்த்திவலைகளாக, களிற்றுப் படையை அடுத்து வரும் காலாட் படையினர், கேடகம் ஏந்திய கைகள் முன்கை, அவற்றிற்குப் பின்னக ஏந்தி வரும் வேற்படைகளின் வெள்ளொளிகளாலும் முனைகள், கருநீலநிற வெள்ளத்தில் வெள். ளொளி காட்டிப் பிறழும் மீன்களாக, போர் எழுச்சி குறித்தும், போரில் பெறு வெற்றி குறித்தும் எழுப்பும் போர்ப் பறை

96