பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழுஉநிலை அதிர மண்டி:

கடுஞ்சின விறல்வேம் பறுத்த பெருஞ்சினக் குட்டுவன்' எனப் பதிற்றுப் பத்துப் பாடல்களும் (44, 49)

'பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின் முழாரை முழுமுதல் துமியப் பண்ணி வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர் பல்லிரும் கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒமுகை பூட்டி’ என ஐந்தாம் பத்தின் பதிகமும் கூறியிருப்பதோடு

'பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு வேம்பு முதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிப் பொறைய’ என இளங்கோவடிகளாரும் கூறியுள்ளார்.

(சிலம்பு: 27 : 124.126)

கன்னிக்காவிரியைக் கண்டுகளித்ததால் பெற்ற இன்ப உணர்வு இளமைப்பொலிவு குன்ருதிருக்கச், சேரநாடு புகுந்து, செங்குட்டுவனைக் கண்ணுற்ற புலவர் அவன்பாலும் அக்காவிரிக் காட்சியையே கண்டார். காவிரி, ஓடும் தன் நெறி தவருது ஒடுவது போல், செங்குட்டுவனும் செங்கோல் முறையுணர்த்தும் நெறியிலிருந்து சிறிதும் பிறழாது நாடு காத்துவந்தான்். காவிரி, தன் வெள்ள ப் பெ ருக் கால் வையகத்தை வாழ்விப்பது போலவே, குட்டுவனும் நாட்டு மக்களின் வளம் பெருக்கி வாழ்வளித்து வந்தான்். மன்னுயிர் போற்ற பெய் தொழில்புரியும் மழை கண்டு மருள்வது மதியில்

95