பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேர்கிழக்கு முகமாகவே ஒடிக் கடலோடு,கலக்கும். காவிரியின் இப்போக்கையும், எண்ணரும் .ே நா ய் க ளு க் கு இனிய மருந்தாகிப் பயன்படும் பற்பல மரம் செடி, கொடிகள் மண்டிக் கிடக்கும் மலைகளுடும், கா டு க ளு டும் உருண்டோடி வருவதால், அவற்றின் சாறெலாம் கலக்கப் பெற்றிருக்கும் தன்னுள் மூழ்கி எழும் மக்களின் பிணி போக்கியும், தன் இருகரை நிலங்களுக்கும் நிறைநீர் அளித்து, ஆங்குச் செங்கரும்பும், செந்நெல்லும் போலும் உணவுப் பொருள்களை உளவாக்கி மக்களின் உறுபசி ஒழித்தும், உலகை வாழ்விக்கும் அதன் பெருமையையும், இவ்வாறு தனித்து ஓடியே பயன் தர வல்ல அதைெடு, ஆன்பொருநையும் குடவறுைம் வந்து கலக்கி, அவற்றின் வ ள ங் க ளு ம் ஒன்று கூட, வளமார் செல்வங்களை வாரி வழங்கும் முக்கூடற்பெருமையினையும், மலை போலும் அலைகள் எழ, அவ்வலைகளின் தலைகள் வெண்னுரை தெறித்து வெண்ணிறம் காட்ட, பிறழ்ந்த வழிப் பேரொளி காட்டும் பருமீன் இனங்கள் விளையாட, ஓவெனும் பேரொளி எழப், பெருக்கெடுத்துப் பாயும் அதன் ஒடுங்காட்சியையும் பலமுறை கண்டு களித்துள்ளார்.

மோகூர்ப் பழையனைச் செங்குட்டுவன் வெற்றி கொண்ட செய்தியை, -

'நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை சேணளுயினும் கேள் என மொழிந்து புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு அரண்கள் தாவு மீஇ அணங்கு நிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் முரசும் கொண்டு - நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து முரசுசெய முரச்கிக் களிறுபல பூட்டி . ஒழுகை உய்த்தோய்” ... - “வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து

94