பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. வெருவரு புனல்தார்

சோணுட்டில் பேரரசு செலுத்திய உருவப்பஃறேர் இளஞ் சேட்சென்னி, அவன் மகன் கரிகாற்பெருவளத்தான்் ஆகிய இருவர் அவைக்களத்தும் அமர்ந்து, அவர்கள் ஆற்றிய அரும்பெரும் செயல்களையெல்லாம் பார்த்துப் பாராட்டும் வாய்ப்பு, புலவர் பரணர்க்குப் பெருக வாய்த் திருந்தமையால், காவிரிக்கு அணையும் கரையும் அமைத்து, அதன் நீரைப் பயன் கொள்ளக்கருதிய கரிகாற்பெருவளத்தான்், காவிரிப் பெருக்கின் அளவு எவ்வளவு, அதில் அணை அமைத்தற்குரிய இடம் எ து வ ச த ல் கூடும் என்பனவற்றை அறிந்து கொள்வான் வேண்டி, அக்காவிரி கடலோடு கலக்கும் தன் நாட்டுப், புகார்த்துறை தொடங்கி, அது தோன்றும் குடகு மலை காறும் உள்ள அதன் கரை வழியே சென்று வந்த காலை, அவைேடு உடன் செல்லும் வாய்ப்புப் பெற்றிருந்தமையால்,கன்னிக் காவிரியின் இயல்புகள் அனைத்தையும், ஒன்றுவிடாமல் அறிந்திருந்தார்.

காவிரி தோன்றும் குடகுமலை இடம், பெறும் மேலை மலைத் தொடர்ச்சி, தென்மேற்குப் பருவக்காற்றின் துணையால் பெரு மழை பெய்யும் இடமாம். காடு மண்டிய அம்மலையின் முழை. களில் வாழும், மான் முதலாம் விலங்குகள் பலவும் அஞ்சி நடுங்குமாறு பேரிடிமுழங்கத் தோன்றும் கார்மேகங்கள், சுழன்று சுழன்று வீசும் சூருவளிக் காற்ருேடு கலந்து, ஆலங்கட்டிகளோடு கூடிய பெருமழைத் துளிகளைக் கடுவிசையோடு கொட்டும். ஆங்குப் .ெ ப ய் யும் அப்பெருமழை நீரால், பொங்கிப் புரளும் பெரு வெள்ளமாகப் பாய்ந்தோடிவரும் காவிரி, மலைநாடுகளைக் கடக்கும் வரை, குறுக்கிடும் மலை. களுக்கும் மடுவுகளுக்கும் ஏற்ப, கிழக்காகவும், மேற்காகவும் பலமுறை வளைந்து வளைந்து ஓடி, சோனுட்டில் அடியிட்டதும்,

93