பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்படை ஏந்தி எழுகின்ற. கைகவர் கடுந்தார்=பகைவர்

படைகளைவென்று கைக்கொள்ளவல்ல கொடிய முன்னணிப் படையுடையாராகிய, வெல்போர் வேந்தரும் வேளிரும்=

வெல்கின்ற போர்க்களமே கண்டவர்களாகிய வேந்தர்களும் வேளிர்களும். ஒன்று மொழிந்து=துணையளிக்கும் உறுதியுரை வழங்கி. மொய்வளம் செருக்கி=பேராண்மையுடைமையால் செருக்கு மிகுந்து. மொசிந்து வரும்=கூடித் திரள நின்ற.

மோகூர்=மோகூர்ப்பழையனுடைய வலம்படுகு ரூஉ நிலை அதிரமண்டி = வெற்றிச் சிறப்பு வாய்ந்த படைத்திரளின் அணிகெடுமாறு தாக்கி, நெய்த்தோர் தொட்ட செங்கை

மறவர்=பகைவர் குருதியை அளேந்த தல்ை சிவப்பேறிய

கையினராகிய கோச வீரர்களின் நிறம்படு குருதி= மார்புப் புண்களிலிருந்து வெளிப்பட்ட குருதி. நிலம் படர்ந்து ஓடி=

நிலத்தில் பரவி ஓடி. மழை நாள் புனலில்=மாரிக்காலத்து

புதுவெள்ளம் போல், அவல் பரந்து ஒழுக=பள்ளம் நோக்கிப்

பாய. படுபிணம் பிறங்க=இறந்து வீழ்ந்த பிணங்கள் மலை

போல் குவிய. யாழ்பலசெய்து=எண்ணிலாப் பாழ்களேச் செய்து. படுகண் முரசம் நடுவண் சிலைப்ப=உரைத்த ஒலி எழுப்பும் கண்ணினையுடைய போர் முரசு களத்தின் இடையே

இருந்து முழங்க. வளன்.அற=மோகூர் வளம் முற்றும்

அழியவும். நிகழ்ந்து வாழுநர் பலர்பட- அவ்வரணகத்தே

இருந்து வாழ்ந்தார் பலர் மடியவும். கருஞ்சினை விறல்வேம்பு

அறுத்த - கரிய கிளைகளையுடையதான், பழையன் காவல்

மரமாம் வேம்பினை வெட்டி வீழ்த்திய பெருஞ்சினக்குட்டுவன்

- கடுஞ்சினம்பொருந்திய செங்குட்டுவன. கண்டனம்

வரற்கு - கண்டுவர, யாமும் சேறுகம் - யாமும் செல்

கின்ருேம்; கொளைவல் வாழ்க்கை நும் கிளை இனிது உணி இயர்

=பாடல் தொழிலால் வாழும் இயல்பினரான தும் சுற்றத்தார்

இனிது உண்பாராக; விறலியர் - விறலியர்காள்! நீயிரும்

வம்மின்=நீங்களும் வாருங்கள். - -

92