பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. 'யாமும் சேறுகம்; நீயிரும் வம்மின்;

துயலுங் கோதைத் துளங்கியல் விறலியர்! கொளைவல் வாழ்க்கை நும்கிளை இனிது உணி இயர்! களிறு பரந்துஇயல, கடுமா தாங்க, 5 ஒளிறுகொடி நுடங்க, தேர்திரிந்து கொட்ப, எஃகு துரந்து எழுதரும் கைகவர் கடுந்தார் வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து, மொய்வளம் செருக்கு மொசிந்துவரு மோகூர், வலம்படு குபூஉ நிலை அதி ர மண்டி 10 நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்

நிறம்படு குருதி நிலம் படர்ந்து ஓடி மழைநாட் புனலின் அவல்பரந்து ஒழுகப் படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து படுகண் முரசம் நடுவண் சிலைப்ப 15 வளன் அற நிகழ்ந்து வாழுநர் பலர்படக்

கருஞ்சினை விறல்வேம்பு அறுத்த பெருஞ்சினக் குட்டுவன் கண்டனம் வரற்கே'. களிறு இயல, மா தாங்க, கொடி நுடங்க, தேர் கொட்ப எழுதரும் தாரினராகிய வேந்தரும் வேளிரும் மொழிந்து செருக்கி மொசிந்து வரும் மோகூரின் நிலைஅதிர மண்டி மறவர்குருதி ஒடி ஒழுக பிணம் பிறங்க, பாழ்செய்து, முரசம் சிலப்ப, வளன்.அற, பலர்பட, வேம்பு அறுத்த குட்டுவன் கண்டனம்வரற்கு யாமும் சேறுகம், விறலியர்! கிளைஇனிது உணி இயர், நீயிரும் வம்மின் என வினைமுடிவுசெய்க.

இதன் பொருள்:-களிறு பரந்து இயல - யானைகள் பரந்து செல்ல, கடுமா தாங்க=வி ைர ந் து செல்லும் குதிரைகள், வீரர் ஆணை ஏற்றுச் செல்ல. ஒளிறு கொடி நுடங்க தேர் திரிந்து கொட்ப-ஒளிவீசும் கொடிகள் அசையத் தேர்கள் சுழன்று சுழன்று செல்ல. எஃகு துரந்து எழுதரும் .

91