பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுதியாகத், தன் காவல் மரமாகக் கொண்டு, தன் கண்ணும் கருத்துமாகப் பழையன் வளர்த்து வந்த, வேப்ப மரத்தை வெட்டி வீழ்த்தி அழித்தான்். -

அவ்வெற்றிப் பெருமிதத்தோடு சேரநாடு திரும்பு கின்ருன் செங்குட்டுவன் என அறிந்து, அந்நாட்டு ஆடவரும் பெண்டிரும், தலைநகர் வஞ்சிமாநகர்க்கு விரைவது கண்டார் புலவர் பரணர். அவ்வெற்றித் திருவுலாவைக்கான, அவர் உள்ளமும் துடித்தது. மேலும், அக்காட்சி நலம் கண்டு தாம் மட்டும் களிப்பது போதாது; தம்மைப்போலும் பிற இரவலர் களும் அதுகண்டு களித்தல் வேண்டும் என்று விரும்பினர். அதல்ை, பாடிப் பிழைக்கும் பாணர்களையும், அவர் பின் சென்று அவர் பாடலுக்கு ஏற்ப ஆடிப் பிழைக்கும் விறலியர் களையும் அழைத்தார். 'வாருங்கள் வஞ்சி மாநகர்க்கு! வந்தால், நீவிரும், நும் பெரும்கிளையும் நெடிது நாள் நன்கு நுகரவல்ல நீள்பெரும் செல்வம் பெறலாம்: ஆகவே, அச் செல்வம் நல்கும் செங்குட்டுவச் செம்மலின் வெற்றித் திரு வுலாக் காண, விரைந்து வாருங்கள் வஞ்சி மாநகர்க்கு' என வருந்தி அழைத்தவாறே வஞ்சி மாநகர்க்கு விரைகிருர் புலவர் பரணர். -

பகைவர் உடலில் பாய்ந்து குருதிக் கரைபட்ட படைக் கலங்களைப் பற்றிப் பறிப்பதால் செங்குருதி படிந்த கைகளைக் கொண்ட கோசவீரர் என்ற தொடர், அக்கோசர் தம் கொற்றத்தை உணர்த்த, அத்தகைய கோசர் உயிரையும் குடித்தான்் என்பதால், குட்டுவன் கொற்றம், குன்றில் இட்ட விளக்கென நின்று விளங்குவதால், இச் செய்யுட்கண் இடம் பெறும் சொற்ருெடர் அனைத்தினும், செங்கை மறவர் என்ற தொடரே, பெரும் பொருட்சிறப்புப் பொருந்தியதாதல் கண்டு, அதற்கு அதனல் .ெ ப ய ரி ட் டு மகிழ்ந்தார்கள் ஆன்ருேர்கள். ‘...'...

90