பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியர் படைத்தலைவனுய்ப் பணிபுரிந்திருந்த காலை, அவன் கீழப்பணிபுரிந்திருந்தவர்களும், பகைவரைக் குத்தியும் வெட்டியும் .ெ வ ற் றி தரும் படைக்கலங்களை, அக்குருதி சொட்டச்சொட்ட எறிந்து, அதல்ை குருதிக் கரைபட்ட கையினராய கொடுமை மிக்கவர்க்ளுமாகிய கோசர்களும், தம் தலைவனைக் காக்க மோகூர்க்கு விரைந்தனர்.

பழையனுக்குத் துணையாய், இத்துணைப்பெரிய அணி பின்னிற்பதை அ றி ந் தும் செங்குட்டுவன் அஞ்சின்ை அல்லன். அக்கூட்டணியையும் அழிக்கவல்ல பெரிய படையை மோகூர் நோக்கிப்போக்கின்ை. காட்டாற்று வெள்ளம்போல் களிறுகள் சென்றன. தம்மீது அமர்ந்து வரும் வீரர்தம் ஆணைக்கு ஏற்பக்காற்றனெ விரைந்தன குதிரைகள். தம்மீது கட்டப்பெற்றிருக்கும் கொடிகள் அலைப்புண்டு ஒளிகாட்டுமாறு தேர்ப்படை உருண்டோடிச் சென்றது. வேல் ஏந்திய வீரர்கூட்டம் வெள்ளம்போல் பறந்து சென்றது. அத்தகைய பெரும்படை மோகூரைத் தாக்கினமையால், கோசவீரர்களின் மார்புப்புண் களிலிருந்து கொப்பளித்து வெளிப்படும் குருதி, பெருமழை பெய்யப், பள்ளம் நோக்கிப்பாயும் மாரிக் காலத்து வெள்ளம்போல் பாய்ந்து ஒட, அவ்வெள்ளத்தில், உயிரிழந்து வீழ்ந்த வீரர் உடல்கள் மிதந்து செல்லக், க டு ம் .ே பார் புரிந்து வெற்றி முரசு முழக்கி வீறுபெற்ருன் வஞ்சிக்காவலன்.

நண்பன் அறுகைக்கு அடாது புரிந்தவன் என்பதால் பழையன் மீதுகொண்ட செங்குட்டுவன் சினம், அப்பழையனையும் அவனுக்குத் துணைவந்தாரையும் வெற்றி கொண்டதோடு அமைதி கொண்டிலது. அதல்ை, அவனுக்குரிய மோகூர் அரண அழித்து உள்புகுந்து, ஆங்குள்ள செல்வநலங்களை யெல்லாம் சீரழித்தான்். அந்நலம் துய்த்து நல்வாழ்வு வாழ்ந்திருந்தாரையெல்லாம் நலம் இழக்கப் பண்ணினான்

89