பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. செங்கை மறவர்

சேரன் செங்குட்டுவன், ந ண் பர் க ள் பா ல் பேரன்புடையவன். அவர்க்கு நேரும் ஆக்கக் கேடுகளைத் தனக்கு நேர்ந்தனவாகக் கொள்ளும் நல் உள்ளம் வாய்க்கப் பெற்றவன். அத்தகையான், அறுகை என்பானேர் ஆற்றல் மறவனைத், தன் ஆருயிர் நண்பகைக் கருதிப் பழகி வந்தான்். ஆனல் அறுகை, அத்துணை நல்லவன் அல்லன். அக்காலைத் , தமிழகத்தின்மீது படையெடுத்து வந்த மோரியர் என்ற வட நாட்டுப், பேரரசர்களை .ெ வ ன் று துரத்தித், தமிழ்நாட்டுத் தன்மானத்தைக் காத்தவனும், பாண்டியர் படையில் பணிபுரிந்த, கோசர் படைக்குத் தலைவனுமாய், மோகூரில் இருந்து ஆட்சி புரிந்து வந்த ப ைழ ய ன் என்பாைேடு பகை கொண்டமையால், அப்பழையல்ை வென்று துரத்தப் பட்டான். அத்தோல்வியால், 'வெல்போர் அறுகை' என அதுகாறும் போற்றப்பட்டு வந்த தன் புகழ் அழிந்தமையால், ! உளம் நொந்த அறுகை தொலைநாடு சென்று தலைமறைத்துக் கொண்டான். ஆனல், நண்பன் தோல்வி, தன் தோல்வி-. யாகும்; ஆகவே அத்தோல்வியாலாம் பழியைத் துடைப்பது தன்கடன் எனத்துணிந்தான்் குட்டுவன், துணிந்தவாறே போர் தொடுத்தும் விட்டான். -

பழையன் அஃது அறிந்தான்். செங்குட்டுவன் பேராற்றல் படைத்தவன்; களம் பல கண்டு வெற்றி பல பெற்றவன் என்ற உண்மைகளை உணர்ந்து அஞ்சிய பழையன், தமிழகத்தின் பிறபகுதிகளை ஆண்டுகொண்டிருந்த சோழபாண்டிய பேரரசர் களையும், சில ேவ ள் கு ல ச் சிற்றரசர்களையும் துணைக்கு அழைத்தான்். வடவர் படையை வென்று, தமிழகத்திற்குப் பழையன் புரிந்த பெரிய நன்றியை நினைந்து, அவர்களும் அவனுக்குத் துணை வந்தனர். அவர்களோடு, அவன்

88