பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றியதாகவும் இல்லாமல் வெறும் ஒலி அளவே உடைய தான் நிலையிலும், பெற்ருேர்களுக்குப் பேரின்பம் ஊட்டவல்ல தான் குழந்தைகளின் மழலை போன்றது புரவலர்களைப் பாராட்டும் இரவலர்களின் பாக்கள் எனப்பாடும் மரபும் உண்டு. யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு அருள்வந்தன. வால் புதல்வர்தம் மழலை: என் வாய்ச்சொல்லும் அன்ன.” (புறம்:92:1-4) என்பதுகொண்டு நோக்கியவழி. அத்தொடர், செங்குட்டுவனைப் பாடும் புலவர் பாட்டு, மழலை போன்றது என்ற பொருளும் உணர்த்துவதாகும். இத்தகு பொருள்நய மெல்லாம் தோன்ற, புலவர் பரணர், கொள்ளாப்பாடல்” என்ற தொடரை ஆண்டிருக்கும் புலமை நலம் போற்றற் குரியது.

87