பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உளவாகும் அழகுப் பொறிகளையும் உடைய மலர் மார்பனே! நின்மலைப் பிறந்து நின் கடல் மண்டும் க உனக்கு உரிய மலையில் பிறந்து, உனக்கு உரிய கடலில் சென்று கலக்கும். மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழாவில் = புதுப்புனல் காரணமாக நிகழும் இப்புனலாட்டுப் பெருவிழாவில். பொழில்வதிவேனில் பேரெழில் வாழ்க்கை வேனிற் பருவத்தே வந்து பொழிகளில் வாழ்வதாகிய பெரிய எழில் மிக்க வாழ்க்கையுடையவராகிய மேவரு சுற்றமொடு=தம்மை அடைந்து விரும்பி வாழும் சுற்றத்தாரோடு, உண்டு இனிது நுகரும்=இனிய உணவு உண்டும் வேறுபல இன்பங்களையும் நுகரும். ஆயம் ஆடும்= செல்வமக்கள் கூடி ஆடும், தீம்புனல் காஞ்சி அம்பெருந்துறை மணலினும்=இனிய புதுப்புனல் ஒடும் இக்காஞ்சி ஆற்றின் அழகிய பெருந்துறைக்கண் பரந்து கிடக்கும் இம்மணலைக் காட்டிலும். பல=பல ஆண்டுகள். நின் பெயர் வாழியர்= உன் பெயர் நீடு வாழ்வதாகுக!

கொற்றத்தாலும், கொடை வளத்தாலும் சிறந்து விளங்குவான் ஒருவன் புகழ், விரிவாகப் புகழ்ந்து பாடப்பாட, மேலும் விரிந்துகொண்டே போவதல்லது முடிவு காண மாட்டாதும், ஒர் அளவுக்குள் அடைத்துப் பாடஎண்ணின் அச் சொல் எல்லைக்குள் சிலவே கூறப்பெற, பலகூறப்பெற மாட்டாது விடப்பட்டும் போகும் எனப்பாடும் ஒரு மரபும் உண்டு. 'விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும், மம்மர் நெஞ்சத்து எம்மைேர்க்கு ஒருதளை கைம் முற்றல நின்புகழே' (புறம்:53:6-8) என்பதுகொண்டு நோக்கியவழி, 'கொள்ளாப் பாடல்’ என்ற தொடர், குட்டுவன் புகழ் பாடுவார் பாட்டெல்லைக்குள் அடங்காப் பெருமையுடையது, என்ற பொருள் தருவதாகும். - - - - • ,

இசையொடு -gu,5Tಷನ್ನಿಹಿ @ುಖTಊು, காலத்தோடு தொடர்புடையதாகவும் இல்லாமல், எந்த ஒரு பொருள்

36