பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதவ ! மார்பு மணலினும் ல் .ே வ நின் பெயர் வாழியரோ என வினைமுடிவு செய்க.

இதன் பொருள்:- பைம்பொன்தாமரை பாணர் சூட்டி = பசிய பொன்னல் பண்ணிய தாமரைமலரைப் பாணர்க்குச் சூட்டி. ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி = ஒள்ளியநுதல் போலும், உறுப்பு நலன் உடையராகிய ஆடல்வல்ல விறலியர்க்குப் பொன்னரி மாலையைப் பூட்டி. கெடலரும் பல்புகழ் நிலைஇ = அழியாதனவும் அளவிறந்தனும் ஆகிய பெரும்புகழை நிலைநாட்டி. நீர்புக்கு = கடல் நீரைக் கடந்து சென்று. கடலொடு உழந்த = கடற்கொள்ளைக் கூட்டத்தவராம் கடம்பரோடு கடும் போர் புரிந்த, பனித்துறைப் பரதவ குளிர்ந்த துறைகளைக் கொண்ட கடல் நாட்டுக் காவலனே ஆண்டு = ஆங்கு நீர்ப்பெற்றதாம் = கடல் நீர் வழியாகப் பெற்ற பெரும்பொருளை. ஈண்டு இங்கே. இவர் கொள்ளப் பாடற்கு எளிதினின் ஈயும் - இப்பரிசிலருடைய, நின் புகழ் அனைத்தையும் ஒன்று விடாது தன்னுள்ளே கொண்டு கூறமாட்டாக் குறையுடைய பாட்டிற்காக எளிதாக ஈந்துவிடும். கல்லா வாய்மையன் இவன் கொடைவளத்தின் வகையினைக் கல்லாத வாய்மையுடையவன் இக்காவலன். என=எண்ணி, கைவல் இளையர். பாடும் திறத்திலும் பரிசில் பெறும் திறத்திலும் வல்லவராகிய இசைக்குல இளையர்கள், தத்தம் நேர்கை நிரைப்ப - தங்கள் கைகளை வரிசை வரிசை. யாக நீட்டத்தக்க வணங்கிய சாயல் - நனிமிக்க எளிமைப் பாட்டினையும். வணங்கா ஆண்மை = பகைவர்க்குப் பணியாத பேராண்மையினையும். முனை சுடு கனைஎரி எரித்தலின்பகைவர் ஊர்களைச் சுட்டு அழிக்கும் பெருந்தீ எரித்தமையால். பெரிதும் இதழ் கவின் அழிந்த மாலையொடு-இதழ்கள் தம் அழகைப் பெரிதும் இழந்துவிட்ட மாலையோடு, புலர் சாந்துபூசிப்புலர்ந்த சந்தனத்தையும். பலபொறி மார்ப= ஆடவர்க்கு