பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வின்ர்க்கே அது கிட்டும். ஆகவே இதுபோலும் விழாக்கான விரும்பி, மலைச்சாரல், மலர்ச்சோலை போலும் இடம் தேடி அடைந்து, ஒரிரு நாட்கள் வாழும் வாய்ப்புடையார், எழில் மிகு பெருவாழ்வுடையவராவர்; ஆதலின், அவர் வாழ்க்கையைப் பேரெழில் வாழ்க்கை எனப் பெயரிட்டு அழைக்கும் பெருமையால், இப்பாடலுக்கு, அத்தொடரே பெயராய் அமைந்துளது. 8. பைம்பொன் தாமரைப் பாணர்ச் சூட்டி,

ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிக் கெடலரும் பல்புகழ் நிலைஇ, நீர்புக்குக் கடலொடு உழத்த பனித்துறைப் பரதவ! 5 ஆண்டுநீர்ப் பெற்றதாரம், ஈண்டு இவர்

கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் இவன் எனத் தத்தம் கைவல் இளையர் நேர்கை நிரைப்ப, - வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை, 10 முனசுடு கனையெரி எரித்தலின் பெரிதும்

இதழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர் பல்பொறி மார்ப! நின்பெயர் வாழியரோ! நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தரும் தீநீம் விழவின் 15 பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை

மேவரு சுற்றமொடு உண்டு இனிது நுகரும் - தீம்புனல் ஆயம் ஆடும், - - காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே!"

துறை: இயல்மொழி வாழ்த்து வண்ணம்: ஒழுகுவண்ணம் துரக்கு: செந்தூக்கு பெயர்: நன்னுதல் விறலிய

84