பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுவது கேட்டார். அவர்நாவும் ஒரு பாட்டிசைத்து, அப்பாராட்டுப்பணியில் பங்கு கொண்டார். அதுவே இது.

பாடிப் பாராட்டிய பரணர், புலவர்பாடும் புகழ்படைத்த அப்பெரியோன், இந்நிலவுலகில் நீடு வாழ வேண்டும் என்று விரும்பினர். எண்ணிக் கூறமாட்டா எண்ணில் ஆண்டுகள் இம்மண்ணில் அவன் வாழ வேண்டும் என்று விரும்பினர். ஆயினும், அவ்வாறு வாழ வேண்டிய அவன் வாழ்நாளின் அளவை வரையறுத்துக் காண, அ வ ர | ல் இயலவில்லை. ஆனால், வாழும் காலத்திற்கு, ஒரு வரையறை கொள்ளாது வாழ்த்துவது, வாழ்த்து மரபாகாதே என்றது அவர் மனம். இல்வாறு மனம் தடுமாறும் நிலையில் விற்றியிருந்த அவர்க்கு, ஆங்குப் பரந்து கிடந்த, காஞ்சியாற்று வெண்மணல், ஒருவாறு வழித்துணை புரிவதாயிற்று. தன்னை எ ண் ணி க் காணல் எவர்க்கும் ஆகாது ஆயினும், அவன் வாழ் நாள் அளவிற்கு ஓர் அளவு கோலாய் நிற்க அது முன் வந்தது. அவ்வளவே.இக்காஞ்சிப் பெருந்துறைகண், கண்ணுக்கு எட்டுமளவும் பரந்துகிடக்கும் இவ்வெண்மணலைக் காட்டிலும், மிக்க பெருநாள், வாழ்க அவ்வேந்தன் 1’ என வாழ்த்துரை வழங்கினர்.

சிறந்த வாழ்வாவது, திறந்த வெளியில் வாழ வேண்டிய இழிநிலையின்றி, மலைநிகர் மாடங்களிலும் மனைகளிலும் வாழும் வாழ்வாகும். அதுவே பெருவாழ்வு; எழில் வாழ்வு என்றெல் லாம் போற்றத்தக்கதாம். ஆனால் ஆண்டு முழுவதும், ஆண்டே அடைபட்டுக் கிடப்பார், ஆண்டிற்கு ஒருமுறை யாவது, இயற்கை எழில் மிகும் இன்ப இடம் தேடிச் சென்று இருந்து வரவேண்டும், அதில் ஒரு பேரின்பம் காண வேண்டும். ஆனால் அத்தகு வாழ்வு, மாளிகை வாழ்வினராக வும், மனத்துயர் மிகும் வறுமையில் உழல்வார்க்கு வாய்க்காது. மனம் நிறைவுற்று மகிழ்தற்கு வேண்டும் வளமார் வாழ்

83