பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டும், ஒய்வு ஒழிவு இன்றி இடையருது நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். செங்குட்டுவன் சிறந்த வீரன் என்பது உண்மை; ஆனால் இத் துறையில் மட்டும் அவனுக்கு அத்துணை அறிவு போதாது போலும் ! பரிசில் மாக்களின் பாடல், தன் புகழ் அனைத்தையும் பாடி முடிக்க மாட்டாக் குறைபாடுடைய என்பதை அறிந்து கொள்ளவல்ல அத்துணைக் கல்வி கற்றவன் அல்லன் அக்காவலன். கொடுக்கக் கற்றுக்கொண்டானே ஒழிய, தகுதி அறிந்து கொடுக்கத் தெரிந்துகொண்டான் அல்லன். அத்துணை அறிவிலி அவன்” என அவன் கொடை வளத்தைக், குறை கூறுவார் போல் கொண்டாடுவாரும்,

பரணரும், பொருநரும், கூ, த் த ரு ம், விறலியரும் போலும் பரிசிலர், ஆணும் பெண்ணுமாக அளவிறந்து வந்து, தன்னை வளைத்துக்கொண்டு, தன் பொருளை வாரிச் செல்லு. மளவு அத்துணை எளியவகை ஈண்டுக் காட்சி அளிக்கும் இக்காவலன், களம் புகுந்துவிட்டால், ஆண்டு அவனை அணுகு வது ஆற்றல்மிகு ம ற வர் க் கு ம் ஆகாது. அணுகவந்து அன்புடைமை காட்டுவது விடுத்து, பகையுணர்வுகொண்டு படையொடு வருவார் எத்துணைப் பேரரசராயினும், எத்துணைப் பெரிய படையும், நாடும் உடையவரானும், அவனுல் அவர்கள் அழிவுறுவதல்லது, அவர்களால் அவனை அணுகுவதும் ஆகாது. புதுப்புனல் விழா நி க மு. ம் இக்காஞ்சியாற்றுத் துறைக்கும், அவன் போர்க்களத்திலிருந்துதான்் நேரே வந்துளான் காண்மின். அவன் மார்பில் கிடந்து மணக்க வேண்டிய மலர்மாலையும், மலையச் சந்தனமும், பகை நாட்டுப் பேரூர்களையும், பெருவளம் பயக்கும் வயல்களையும் எரித்தழிக்க காட்டிய தீயின் திறலால் தீய்ந்தும் புலர்ந்தும் கிடப்பது மூண்மின்!” என அவன் ஆண் ைம ைய, ஆற்றலைப் பாராட்டுவாருமாக ஆங்குள்ளார் அனைவரும் அவன் புகழே

$2