பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைதிநிலவும் அச்சிறு நாழிகையே, ஆ க்க ம் குறித்த நல்லாறுகளை ஆய்ந்து க | ண ப த ற் கு ஏற்புடைத்தாதல் அறிந்து, மறுநாட்காலை நடைபெறப்போகும் போரில் மேற்கொள்ள .ே வ ண் டி ய செயல்முறைகளை எண்ணித் துணிவன் ஆதலின், அவன் அச்சிறு துயிலும் கொள்ளான்.

செங்குட்டுவனின் இச்செருவேட்கையினையும், அவ்வேட்கை மிகுதியால் சிறுதுயிலும் கொள்ள மறுக்கும் அவன் மனநிலையினையும் அறிந்த புலவர் பரணர்க்குப், பகையெலாம் பணிந்துவிட்டதாகப், போர் மே ற் .ெ கா எண் டு சென்று பாசறைக்கண் வாழவேண்டிய இன்றியமையாமை இல்லாது போகும், காலத்தில் அரண்மனைக்கண் அவன் வாழ்நாள் எவ்வாறு கழியுமோ என்ற ஐயம் எழலாயிற்று. அக்காலை அரண்மனை வாழ்வார் சிலர், 'புலவர்ப் பெருந்தகையீர்! செங்குட்டுவன் மனம்கவர்ந்த ம ங் ைக ய ர் பலராவர். மான்மதச் சாந்து முதலாம் மணம் கமழ் சந்தனக் குழம்புகள் பூசியும், கண்களில் கருமையும், கைகளில் செம்பஞ்சுக் குழம்பும் தீட்டிக்கொண்டும், வகைவகையான வனப்புடையராய்த் தங்களை ஒப்பனை செய்து கொண்டு, வரிவண்டுகள் விடாதுவந்து மொய்க்குமளவு புதுமைநலம் குலையா மலர் மாலை அணிந்து, அழகோவியங்களாய் உலவும் அம்மகளிர். பரந்து அகன்ற அவன் மார்பின்மீது கொள்ளும் காதல், அம்மம்ம அளந்து கூறும் அளவுடைத்தன்று. அம்மகளிர் அளிக்கும் இன்பம் நுகரும் அந்தப்புர வாழ்வின்ப நினவால், செங்குட்டுவன் வாழ்நாளின் பெரும்பகுதி எளிதாகக் கழிந்து விடும்; ஆகவே, அரண்மனை வாழ்க்கையில் அவனுக்குப் பொழுது போகாது எனல்பொருந்தாது” என்றனர். ஆனால், செங்குட்டுவைேடு ஈர்உடலும் ஓர்உயிருமாக இரண்டறக் கலந்து பழகி, அவன் பண்பெலாம் அறிவார்க்கு, அரண்மனை வாசிகள் கூறியதில் உண்மை இல்லை என்பது தெரியும்,

98.