பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்குட்டுவன், மகளிர்தரும் இ ன் பத் ைத வெறுப்பவன் அல்லன். அதனை ஆரநுகர்ந்து, அந்நுகர்ச்சி அயர்ச்சியால், உறங்காத் தன்கண்களும் தம்மைமறந்து உறங்குமளவு அதில் விருப்பம் உடையவன் தான்். ஆனால், மனைவிழைவார் மாண்பயன் எய்தார்; வினவிழைவார் வேண்டாப் * பொருளும் அது’’ என்ற உலகியல் உணர்வு வரப்பெற்றவன் அவன். மகளிர் தரும் இன்பத்தைக் காட்டிலும், போரில்பெறலாகும் வெற்றிப்புகழ்தரும் இன்பத்தையே அவன் உள்ளம் பெரிதும் உவக்கும். அவ்வின்பத்திலேயே பழகிவிட்டவை அவன் கண்கள். அவை, உரிமை மகளிரின் அலைஅலையாய்ச் புரளும் கூந்தல் ஆணையில் கிடந்து உறங்கிப் பெறும் இன்ப வாழ்வை நெடிது நுகர நினையா. ஆகவே, அரண்மனையில் பலநாள் வாழநேரின், அதை அவனுல் தாங்கிக் கொள்வது இயலாது என்பதை அறிந்தவர் புலவர். அதனல், பாசறை வாழ்க்கையிலேயே வாழ்ந்து பழகிவிட்ட செங்குட்டுவனை அரண்மனையில் காண நேர்ந்ததும், குட்டுவ! பாசறை வாழ்க்கையின் இடையிடையே, இவண் வந்து தங்கும் இச்சிறு பொழுதிலும், மகளிர்தரும் இன்ப உணர்வு உளவாகவும், உறங்க மறுக்கும் உன் கண்கள், பகையொழிந்த பேரரசு அமைந்து விட்டமையால், போர்க்களம் புகவேண்டா நிலை பெற்று விடும். உன் வாழ் நாளி ன் இறுதிக்காலத்துப் பெருநாட்களை, எவ்வாறு உறங்கிக் கழி க் க அறியுமோ அறியேம்' என வியந்து வினவுவாராயினர்.

பகைவர்கள் அஞ்ச வேண்டுவது, களிறு முதலாம் அவன் நாற்படையே என, அவன் பாசறைப் பெருமை பாடுவதே புலவர் கருத்தாம் என்ருலும், அவ்வாறு பாடுவதால் பொரும் சிறக்காது ஆதலின், வேந்தன் படைகண்ட வழிக் கொள்ளும் அச்சம், வெள்ளப் பெருக்கம் கண்டுகொள்ளும் அச்சத்தினுள் கொடி.து.அன்று எனக் கொள்வதே உலகியலாம் எனும்

99