பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்வால், அஞ்சத்தக்க புனலினக்கூறி, அப்புனல்போலும் நாற்படை என்று கூறிய வழியே அந்நாற்படையின் கடுமை நனிமிகத் தெளிவாகப் புலம்ை எனஉணர்ந்த, புலமை நலத்தால் தோன்றியதான் வெருவரு புனல்தார் என்ற புலமைநலம் சொட்டும் அத்தொடரே, இப்பாவின் பெயராகிப் பெருமையுற்றது,

10. 'மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்,

கான்மயங்கு கதழ்உறை ஆலியொடு சிதறிக், கரும்பு அமல் கழனிய நாடுவளம் பொழிய, வளங்கெழு சிறப்பின் உலகம் புரைஇச், 5 செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர்நிறைக்

காவிரி அன்றியும், பூவிரி புனல்ஒரு மூன்றுடன் கூடிய கூடல் அளையை; கொல் களிற்று உரவுத்திரை பிறழ, வல்வில் பிசிரப் புரைத்தோல் வரைப்பின் எஃகுமீன் அவிர் வர, 10 விரவுப்பனை முழங்கொலி வெரீஇய வேந்தர்க்கு

அரணமாகிய வெருவரு புனல்தார், கள்மிசையவ்வும், கடலவும் பிறவும் அருப்பம் அமைஇய அமர்கடந்து உருத்த, ஆண்மலி மருங்கின் நாடு அகம்படுத்து, 15 நல்லிசை நனந்தலை இரிய, ஒன்னர்

உருப்பற நிரப்பினை ஆதலின், சாந்துபுலர்பு வண்ணம் நீவி, வகைவனப் புற்ற வரிDமிறு இமிரும் மார்புபிணி மகளிர் விரிமென் கூந்தல் மெல்லணை வதிந்து, 20 கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப் பொழுது கொள் மரபின் மென்பிணி அவிழ, எவன் பல கழியுமோ? பெரும! பன்னுள் பகை வெம்மையின் பாசறை மரீஇப்

100