பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுடர்வி வேங்கை

பாடிய புலவர் : பரணர்

"பாணன், பறையன், து டி ய ன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை,” என்பது புறநானூறு. தம் வாயிற்கண்வந்துநின்று, புகழ்பாடுவார்க்கு வாரிவழங்கும் வேந்தர்கள் மாட்டும், வேளிர்கள்மாட்டும் சென்று, பேரியாழ் சீறியாழ் இசைத்துப் பாடிப் பெறும் பரிசில் கொண்டு வாழும் வழக்காறுடையவர் பாணர். வள்ளல் பேகனைப் பாடிய பாக்களில், 'சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழநின் கார் எதிர் கானம் பாடிளுேம்’ (புறம், 144), களங்கனியன்ன கருங்கோட்டுச் சீறியாழ் நயம்புரிந்துறையுநர் நடுங்கப்பண்ணி’’ (புறம்:145) என்றும், கடலோட்டிய வேல்கெழு குட்டுவனைப் 'அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப் பாடி வந்திசின்’ (புறம்: 369) என்றும் பாடியுள்ளார் பரணர். ஆகவே பரணரும், பாணர் குடியில் வந்தவராவர்; ஒரு குடியில் பிறந்து சிறந்த நிலைபெற்றுவிட்ட ஒருவரின் இயற்பெயர் மறைந்துபோக, அவர் குடிப்பெயரே, இயற்பெயராக மாறி வழங்குவதும் உண்டு; சேக்கிழார், வெண்ணிக்குயத்தியார் என்ற பெயர்களைக்காண்க. அதுபோல் பாணர்குடியில் வந்து பெரும்புலமை பெற்றுத் திகழ்ந்தமையால், பரணர், பாணர் என்றே அழைக்கப்பட்டார்; பரணர் என்பதில், பகரத்தின் நெடில் குறிக்கும் குறியீடாம் 'ா', ஏடு எழுதியோரால் 'ர' கரமாக மாற்றப்பட்டுவிடவே, பாணர் என்ற அப்பெயர், 'பரணர்’ என மாறி வழங்கலாயிற்று என்பர் சிலர்.

பாடிய பாட்டில்

புரவலர்களைப் பாடிப் பரிசில் பெறும் புலவர்கள், பாடும் போது, பாடியும், ஆடியும் பரிசில் பெற்று வாழும் இரவலர்

!