பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களாம் பாணர், பொரு நர், கூத்தர்களாகத் தங்களை உருவகப்படுத்திக் கொண்டு பாடுவது ஒரு மரபு. உழவர் குலத்தவர் என்பதை உணர்த்தும், கிழார் என்ற சிறப்பு அடையைத், தம்பெயரோடு இணைத்துக்கொண்டிருக்கும் புலவர் அரிசில்கிழார், பரணர் பாடிய அதே பேகனைப் பாடிய தம் பாட்டில், "சீறிய ழ் செவ்வழிபண்ணி நின் வன்புல நன்னடுபாட எ ன் னை ந ய ந் து’’ (புறம்: 146) என்றும், தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியரால், அந்தணர் குலத்தவர் என அறுதியிட்டு முடிவு செய்யப்பட்டவராய, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், ஆய்என்ற வள்ளலைப் பாடுங்கால், 'வளைக்கை விறலி என் பின்னளாகப், பொன்வார்த்தன்ன புரியடங்கு நரம்பின், வரிநவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்பப், படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ், ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத்தழிஇப் புகழ்சால் சிறப்பின் நின் நல்லிசை உள்ளி வந்தனென்' (புறம்: 135) என்றும், பரணர் பாடியது போலவே, யாழ்இசைத்து வந்து பாராட்டிய - தாகப் பாடியிருப்பதுகாண்க, ஆகவே, பாணர் சீறியாழ் இசைத்தாகக் கூறுவதுகொண்டே அவர், பாணர் குடியில் வந்தவர் எனல் பொருந்தாது. -

மேலும், பரணர் பெயர், பரணர் என்பதே; அவர் பெயர் பாணர் என்பதோ, அது ஏடு எழுதுவோரால் பரணர் எனத் திருந்திவிட்டது என்பதோ பொருந்தாது என்பதற்கான அகச்சான்று ஒன்றும் உளது. பரணர் காலத்தவராய ஒளவையார், அதியமானப் பாராட்டிய பாட்டு ஒன்றில், அவன் பரணராலும் பாராட்டப் பெற்ற பெருமைக்குரியவன் என்ற பொருள்படப் பாடிய -

பரணன் பாடினன் மற்கொல்; மற்றுநீ முரண்மிகு கோவலூர் நூறி நின் s அரண்டு திகிரி ஏந்தியதோளே” (புறம்; 99)