பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற பாட்டில் 'முரண் மிகு', அரண்டு’ என்ற சொற்களுக்கு ஏற்ற எதுகைத் தொடையாகப், பரணர்’’ என்ற பெயரே பொருந்த ஆளப்பட்டிருப்பது காண்க. ஆக, பரணர் பெயர் பரணர் என்பதே ; அது பாணர் என்பதன் திரிபு அன்று எனத் தெளிக.

குடக்கோ நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன் ஆகிய சேர அரசர்களையும், உருவபஃறேர் இளஞ்சேட் சென்னி, வேற்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி, கரிகாலன் ஆகிய சோழ அரசர்களையும், பசும்பூண் பாண்டியன் என்ற பாண்டிய மன்னனையும், ஆட்டன் அத்தி என்ற, சேர சோழ குலத் தம்பதியரையும், அதியமான், ஆய், ஒரி, காரி, நள்ளி, பேகன் ஆகிய வள்ளல்களையும், அகுதை, அன்னிமிஞிலி, எயினன், கட்டி, கணையன், தித்தன், திதியன், நன்னன், பாணன், பொருநன் போலும் குறுநிலத்தலைவர்களையும், அறிந்து, பாராட்ட வேண்டியவர்களைப் பாராட்டியும், பழிக்கத் தக்கவர்களைப் பழித்தும் உள்ளார்; தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்திருந்த இவர்களை அறிந்திருந்த பரணர், அதுபோலவே, அவர்காலத்தில் பலரின் கருத்தை ஈர்த்தன வாகிய, வாகைப் பறந்தலை, வெண்ணிப் பறந்தலை, கூடற் பறந்தலை, பாழிப் பறந்தலை ஆகிய போர்க்கள நிகழ்ச்சிகளை யும், காவிரியில் கழார்ப் பெருந்துறையில் நிகழ்ந்த நீர் விழாவில், ஆதிமந்தியின் கணவன் ஆட்டனத்தி, மறைந்து போனது, கரிகாற்பெருவளத்தான்் வெண்ணியில் பெற்ற கன்னிப் போர் வெற்றி குறித்து, அழுந்துாரில் வெற்றி விழாக் கொண்டாடியது, தனக்கு உரிய நறுமாங்காயைத் தின்ருள் ஒருபெண் என்பதற்காக, அவள் தந்தை, அவள் நிறை பொன்தர முன்வந்தும், அது ஏற்காது அவளை, நன்னன், கொன்று பழி கொண்டது, பாழியில் பெரும்பொருள் ஈட்டி வைத்திருப்பது, த ந் ைத யி ன் கண்ணைப் போக்கிய

3