பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை எழுப்பும் = வெற்றி குறித்து முழங்கும் வலம்புரிச்சங்கு ஒலிக்கும், இமிழ் எனும் ஓசை எழுப்பும். பீடுகெழு செல்வம் மரி இய கண் = பெருமை பொருந்தியதான் பாசறை வாழ்க்கையாகிய அப் பெருஞ் செல்வத்தில் பழகிவிட்ட உன் கண்கள். சாந்து புலர்பு = சந்தனக் குழம்பைப் புலரப் புலரப் பூசிக் கொண்டும். வண்ணம் நீவி=திலகம், மை, செம்பஞ்சுக் குழம்பு போலும் வண்ணங்களை, முறையே, நுதல், கண், கை முதலியவற்றில் பூசிக்கொண்டும். வகை வனப்பற்ற = வகை வகையாக அழகு செய்து கொண்டவரும். விரிDசிமிறு இமிரும் = தாம் அணிந்திருக்கும் மலர் மாலைகளிலிருந்து ஒழுகும் தேன் உண்பான் விரும்பி, வரி வண்டுகள் வந்து தம்மை விடாது மொய்க்கப் பெற்றவரும் ஆகிய. மார்பு பிணி மகளிர் = உன் மார்பின் மாண்பு கண்டு உன்பால் காதல் கொண்ட மகளிரின், விரிமென் கூந்தல் மெல் அணைவதிந்து, அடர்ந்து விரிந்த மெல்லிய கூந்தலாகிய மெத்தென்ற படுக்கையில் கிடந்து, கொல் பிணி திருகிய மார்புகவர் முயக் கத்து = கொல்வது போலும் கொடிய துன்பம் தரவல்லதான், காம வேட்கை மிகுவதால், இருவர் மார்பும் ஒன்று கலக்கதான் அணைப்பால்: பொழுது கொள் மரபின் = இ ர வி ன் காலத்தைப் பயன் கொள்ளும் இயல்புடையதான். மென் பிணி = அணப்பின் இறுதியில், அம் முயக்க அசதியால் உண்டாகும் சிறுதுயிலும். அவிழ = கலந்து போக, பல = வாழ்நாள் பலவும். எவன் கழியுமோ? = எவ்வாறு கழியுமோ யாம் அறியேம். எ. று. -

103