பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுடையவாகிய காவிரி, ஆன்பொருநை, குடவன் ஆறு என்ற ஒரு மூன்று ஆறுகள் ஒன்று க ல ந் த திருமுக்கூடலையும் ஒப்பாவாய், கொல்களிற்றி உரவுத்திறை பிறழ=கொல்லும் போர்க் களிறுகளாகிய பெரிய அலைகள் அசைந்து வர. வல்வில் பிசிர = வலிய விற்படைகளாகிய வெண்ணுரை தெறிக்க. புரைதோல் வரைப்பின் = பெரிய கேடகங்களுக்கு மேலாகத் தோன்றி. எஃகு மீன் அவிர்வர = வேற்படை களாகிய மீன்கள் ஒளிவிட. விரவுப்பணை முழங்கொலி வெரீஇய வேந்தர்க்கு = போர்ப்பறை முதலாம் பல்வேறு பறைகளோடு கலந்து முழங்கும் முரசொலி கேட்டு அஞ்சி அடி பணிந்த அரசர்க்கு அரணமாகிய வெருவரு புனல்தார் = அரணய் அமைந்து காக்க வல்லதான்தும், பணிய மறுக்கும் பகைவர்க்கு அச்சம் தருவதுமாகிய தூசிப் படையாகிய பெரு வெள்ளம். கன்மிசையவ்வும் = மலைமீதும். கட ல வும் = கடலிடையும், பிறவும் = வேறு பிற இடங்களிலும் உள்ளன வாகிய, அருப்பம் அமைஇய = பகையரசர்க்குரிய அரண் களிடத்தே எழுந்தனவாகிய, அமர்கடந்து = போர்களை வென்று. உருத்த ஆண்மலி மருங்கின் நாடு அகப்படுத்து = அஞ்சத்தக்க ஆண்மையுடையவராகிய வீரர்கள் மலிந்த இடங் களையுடையவாகிய பகைநாடுகளைக் ைக க் .ெ க | ண் டு, நல்லிசை = அப் பகைவர்கள் அன்றுவரை பெற்றிருந்த பெரிய புகழ். நனந்தலை இரிய = இவ்வுலகை விட்டு அறவே அழிந்து போகுமாறு. ஒன்னர் = அப் பகைவர்களின். உருப்பு = பகையுணர்வாகிய பெரு நெருப்பு. அற நிரப்பினை ஆதலின் = அறவே அவிந்து இல்லையாகச்செய்து விட்டாய் ஆதலின். பகை வெம்மையின் = பகைவர் மீது கொண்ட பெருஞ் சினத்தால். பன்னாள் பாசறை மரீஇ = பல நாட்கள் பாசறையிலேயே தங்கி. பாடு அரிது இயைந்த சிறுதுயில் இயலாது = உறங்குதல் அரிதே வந்து வாய்க்க, அதல்ை கொண்ட சிறுதுயிலும் இல்லாதுபோக. கோடு முழங்கு இமிழ்

102