பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

15

20

பதிகம்

வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச், சோழன் மணக்கிள்ளி ஈன்றமகன், கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவில் கானம் கணையிற் போகி, ஆரிய அண்ணலை வீட்டிப், பேரிசை இன்பல் அருவிக் கங்கை மண்ணி, இனம் தெரி பல்லான் கன்ருெடு கொண்டு மாரு வல்வில் இடும்பிற் புறத்திறுத்து, உறுபுலி அன்ன வயவர் வீழச் சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி, அக்கரை நண்ணிக், கொடுகூர் எறிந்து, பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின் முழாரை முழுமுதல் துமியப் பண்ணி, வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர் பல்லிரும் கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டி வெந்திறல், ஆராச் செருவிற் சோழர் குடிக்கு உரியோர், ஒன்பதின்மர் வீழ வாயிற்புறந்து இறுத்து நிலச்செருவினுற்றலை யறுத்துக் கெடவரும் தான்ையொடு கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்த காசறு செய்யுள்

பரணர் பாடினர் பத்துப்பாட்டு’.

19