பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழும் காட்சியை நினைவூட்டுவதுபோல், கூரிய நீண்ட ஊசி உள்நுழைவதும், வெளிப்படுவதுமாக விரைந்து தொழில்பட, அப்புண்களைத் தைத்து மருந்திட்டு ஆற்றவும் அயரா, உரம் மிக்க உடலும் உள்ளமும் உடையராதல் வேண்டும்; அது மட்டும் அன்று; தம்மீது போர்தொடுத்துவரும் வீரர்களாயி னும், தம்மால் போர்தொடுக்கப்பட்ட வீரர்களாயினும், அவர் களும் அத்தகையவரே ஆதல் வேண்டும்; அத்தகைய பெரு வீரரோடல்லது, அப்போர்ப் ப ண் பு க ளு ஸ் ஒரு சிறிது குறைந்தாரோடு போர்புரிவது பொருந்தாது; அது தம் வீரத்திற்கு ஒர் இழுக்காம் எனும் விழுமிய உள்ளமும் வாய்க்கப் பெற்றவராதல் வேண்டும் என அறிந்து, அத்தகை யாரையே தேர்ந்து படையமைத்திருந்தான்்.

'தான்ை தலைமக்கள் இல்வழி இல்’ என்பது, படை யமைப்பின் தலையாய விதியாகும். இதையும் செங்குட்டுவன் அறிவான். ஆற்றல்மிகு நாற்படையைப் பணிகொள்ளவல்ல தலைவன் பால், அவரைப் பணி கொள்ளவல்ல அவர்கள் அவனே மதிக்கவல்ல ஆற்றலும் திறமும் அமைந்திருத்தல் இன்றியமையாதது என உணர்ந்திருந்தமையால், அப்போர்ப் பண்புகள், படைத்தலைமை தாங்கும் தன்பால், தளர்ந்து விடாமை ேவ ண் டி ப் படைத்தலைமையைப் பிறர்பால் ஒப்படைத்து ஒய்வு கொண்டு விடாது, அதை அவனே மேற்கொண்டிருந்தான்். பட்டத்து யானை மீது அமர்ந்து, போர்க்களம் புகுந்து விட்டால், அப்படைவீரரால் அழிக்க மாட்டாப் பகைவர்களும் அழிந்தே போவர். அத்துணை ஆற்றல் உடையவகை, அவனும் விளங்கின்ை. அதனல், ஆற்றல்மிக்க பகைவர்களையும், அறவழி நின்றே அழித்து வெற்றி கண்டு வீறுபெற்று விளங்கினன்.

இவ்வாறு வெற்றிதரு விரகைவும், விழுமிய வீரர்களைப் பணி கொள்ளவல்லவனாகவும் விளங்கிய செங்குட்டுவன்,

34