பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தசும்பு துளங்கு இருக்கை

"இதனை இதனுல் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்', 'கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அ டு க் கி ய சுற்றத்தால் சுற்றப்படும்’ என்ற அறிவியல் வாய்க்கப் பெற்றவன் செங்குட்டுவன். அதல்ை, தன் படையில் பணிபுரியும் வீரர்கள், எத்தன்மையராதல் வேண்டும்? என்ற தேர்ந்து தெளிதலையும், தக்கார் கிடைக்கப்பெற்ருல், தன்னைவிட்டு அகலும் நினைவே அவர்கள் உள்ளத் தில் என்றும் எழாதவாறு, அவர்களை எவ்வாறு ஒம்புதல் வேண்டும் என்ற, தெளிந்தார்ப் பேணும் திறலையும் நன்கு தெரிந்திருந்தான்்.

வீரர்களாவார், தங்கள் ேவ ந் த ன் மாட்டு அயரா அன்புடையராதல் வேண்டும்; இரவு பகல் இருபோதும், அவன் நல்வாழ்விலேயே நாட்டம் உடையராதல் வேண்டும்; அவனேயே அல்லாமல், அவனுக்கு உரியதான் மாலை, கொடி, முரசு முதலியனவற்றையும் அவளுகவே மதித்து வழிபடும் வழிபாட்டுணர்ச்சி வாய்க்கப் பெற்றவராதல் வேண்டும். அவர்கள் அடிவைக்கும் அமர், எத்தகைய அருமையுடைய தேனும், ஆங்கும் அவர்கள் வெற்றியே குறிக்கோளாய், வெஞ்சமர் புரிதல் வே ண் டு ம். அவர்தம் கால்களில், வீரக்கழல் எக்காலமும் ஒலித்தவாறே இருத்தல் வேண்டும். போர்க்களத்தில் பாய்ந்துவரும் பகைவர் படைக்கலம் கண்டு பயந்து ஒதுங்காது, தம்வேந்தனை நோக்கி எறியும் வேற்படை களையும் தம் மார்பில் ஏற்றுக்கொள்ளவும், அவற்ருல் ஆம் புண்ணின் ஆழ்ச்சி கண்டு அயராது, மீன்தேடி உண்ணும் இயல்புடையதான் சிச்சிலிப் பறவை, நீருள்பாயுங்கால், தன் நீண்ட அலகை, நீர் நோக்கித் தாழ்த்தியவாறே பாய்ந்து, மேலெழுங்கால், அலகை மேலே உயர்த்தியவாறே விரைந்து

3 33