பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னிறப் பூ க் க ள் பூத்துக் குலுங்கும் வேங்கை மரத்தைக் காணும் களிறு, அதைப் புலி எனக்கொண்டு முறித்து அழிக்கும் என்பதை,

'உறுபுலி உருவேய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மதயானை’’ என்ற கலித்தொகை வரியும் (கலி: 38; 6-7) கூறுவது காண்க,

மழை பொய்த்த கடும் வறட்சிக்கு, மூங்கில் பசுமையற்று உலர்ந்து போதல் அறிகுறியாம் என்பதனைக் கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீளிடை’ என்றபுறநானூற்று வரியும் (புறம்: 370; 9) உணர்த்துவது காண்க. .

32