பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரசு முழங்கும் பரந்து அகன்ற போர்க்களத்தில் வலம்படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து = வெற்றிதரும் விழுப்புகழை ஒருசேர உடனே பெற்று. வால்உளை = வெண்ணிறத் தலை யாட்டம் அணிந்த, கடும்பரி ஊர்ந்த - விரைந்து பாயும் குதிரைமீது அமர்ந்து உலா வந்தனவும். கால் உளைக் கடும்பிசிர் உடைய - காற்ருல் அலைப்புண்டு சிறுசிறு திவலைகளாகமாறி உடைவதுபோல். படும் திரைப்பனிக்கடல் = ஓயாது ஒலிக்கும் அலைகளைக்கொண்ட குளிர்ந்த அக்கடலே. உழந்ததாள் = கலக்கி அ ழி த் த நின் தாள்கள். தாவல் உய்யுமோ = அவைபோலும் போர்த்தளர்ச்சி ஒழித்து அமைதி யுறுமோ? கூறுவாயாக, என்றவாறு.

கூத்தர், தம் கூத்தாடும் தொழிலுக்குத் துணைபுரியும் பல்வேறு இசைக் கருவிகளைச், செல்லுமிடமெல்லாம் உடன் கொண்டு செல்வர் என்பதையும், செல்வார், காட்டு வழியில், தமக்கும், தம் இசைக்கருவிகளுக்கும் ஊறுநேராவாறு, கடவுளை வழுத்திக் கொண்டே செல்வர் என்பதையும், கீழ்வரும் மலை படுகடாம் வரிகள், உறுதிசெய்வது காண்க.

'திண்வார் விசித்த முழவொடு, ஆகுளி, நுண்ணுருக்குற்ற விளங்கடர்ப் பாண்டில், மின்னிரும்பீலி அணிதழைக் கோட்டொடு, கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின், இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு, விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ, நடுவுநின்றிசைக்கும் அரிக்குரல் தட்டை, கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி, நொடிதரூ பாணிய பதலையும் பிறவும் கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப நேர்சீர் சுருக்கிய காய கலப்பையர்'

மலைபடுகடாம்: 3.13,

3!