பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் போலும் நிறம் வீசும் பூக்கள் மலர்ந்த வேங்கை மரத்தை, வேங்கைப்புலியாகக் கருதி சினங்கொண்டு. பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்து பூவோடு கூடிய பெரியகிளையை முறித்துப் பிளந்து. தன் மாஇரும் சென்னி அணிபெற மிலேச்சி தனது கரிய பெரிய தலைமீது அழகுபெற அணிந்துகொண்டு. சேர்உற்ற செல்படை மறவர் = ஒன்று திரண்டு பகைமேற் செல்லும் போர்வீரர்கள். தண்டுடை வலத்தர் = வலக்கையில் வாள் தண்டு முதலாம் படைக்கலம் ஏந்தி. போர் எதிர்ந்தாங்கு போர் மேற்சென்று ஆரவாசித் தாற்போல. வழை அமல் வியன்காடு சிலம்பப் பிளிறும், சுரபுன்னே மரங்கள் மலிந்த பெரிய காட்டிடமெல்லாம் எதிர் ஒலிக்குமாறு பிளிறும் கொடுமையுடைய மழைபெயல் மாறிய கழை திரங்கு அத்தம் = மழை பெய்யும் தன் தொழில் மறந்து விட்டமையால் மூங்கில்களும் உலர்ந்து முறிந்து போகும் வழிகள். ஒன்று இரண்டு அல. பல கடந்து = ஒன்று இரண்டு அல்ல, பற்பல வழிகளைக் கடந்து காண்கு வந்திதிசின் - உன்னைக் காண்பதற்கு வந்தேன். தாவாத வஞ்சினம் முடித்த = உரைத்தசூளுரை ஒருசிறிதும் பிழையாவாறு செய்து காட்டிய ஒன்றுமொழி மறவர் ைஎக்காலமும் வாய்மையே வழங்கும் மறவர்களையும். முரசு = முரசையும். உடைப்பெருஞ் சமத்து = உடைய பெரிய போரின் கண். அரசு படக்கடந்து - பகையரசர் அனைவரும் பட்டொழியுமாறுவென்று. வெவ்வர் ஒச்சம் பெருக - தாம் விரும்பும் நண்பரசர்கள் ஆ க் க ம் பெருமாறு. தெவ்வர் இருந்தலை மிளகு எறி உலக்கையின் இடித்து = பகையரசர்களின் பெரிய தலைகளை, மிளகைக் குற்றும் உலக்கைபோல் இடித்து. வைகு ஆர்ப்பு எழுந்தஇடையருது ஒலிக்கும் அலை ஒலியே ஒலிக்கும். மைபடு பரப்பின் கருநிறம் காட்டும் க ட ற் பரப் பு போலும். எடுத்தேறு எய கடிப்புஉடை வியன்கண் = படைக்கலங்களை எடுத்து எறிக என்பதுபோலும் ஆணைகளை அறிவிக்கும் போர்

30