பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுந்தகை ! (16) யாழ் இளையர் பொறுப்ப, இளையர் கடவுள் பழிச்ச, வயக்களிறு பிளிறும் அத்தம் கழிந்து, காண்கு வந்திசின். (1-16) மறவரும் முரசும் உடைய சமத்து, கடந்து, தலை இடித்து, சீர்த்தி இயைந்து, புரவி ஊர்ந்து, கடல் உழந்த தாள் (17-27) தாவல் உய்யுமோ? (17) என வினை முடிவு கொள்க. -

இதன் பொருள்:-திண்தேர் வசை இல் நெடுந்தகை= திண்ணிய தேர்களையுடைய வசைஇலாப்புகழ் கொண்டமிக்க தகுதிப்பாடுடையவனே! புணர்புரி நரம்பின் = யாழ் நரம்பாகப் புணர்தற்கு ஏற்ப முறுக்கிய நரம்பிலிருந்து எழும். தீந் தொடை பழுனிய = இனிய இசையை எழுப்புவதாகிய, வணர் அமை நல்யாழ் = வளைந்த கோட்டினையுடைய நல்லயாழை. இளையர் பெறுப்ப = ஏவல் இளையர் தாங்கி வர. பண் அமை முழவும் = இசையொடு பொருந்துமாறு அமைத்த முழாவினை யும். பதலையும் - ஒருகண் மாக்கிணையினையும். பிறவும் = இவைபோலும் வேறு பல இசைக்கருவிகளையும். கண்ணறுத்து இயற்றிய தூம்பொடு = மூங்கிலில், கணுவை இடையிட்டு அறுத்துச் செய்யப்படும் பெருவங்கியம் என்னும் கருவியோடு. சுருக்கி - ஒருங்கே சேர்த்து. தகைத்த காவில் = ஒரு புறத்தே கட்டித் தொங்கவிடப் பெற்ற காவடியின் மறுபக்கத்தில். து ைற கூ டு கலப்பையர் = இசைத்துறைக்கு வேண்டிய பிறகருவிகள் எல்லாம். கூடின மூட்டையைச் சுமந்தவராய். கைவல் இளையர் - இசைத்துறையில் வல்ல இளையோர். கடவுள் பழிச்ச= செல்லும் வழியில் தமக்கும் தம்கருவிகட்கும் கேடு நேராவாறு காக்குமாறு கடவுளை வாழ்த்தி வர. மறப் புலி குழுக்குரல் செத்து= அவ்வாழ்த்தொலியை, மறவுணர்வு மிக்க புலிக்கூட்டத்தின் உறுமுக்குரலாகக் கருதி அஞ்சி. வயக்களிறு - வன்மை மிக்க ஆண்யானை, வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கை - மலைச்சாரலைச் சார்ந்து வளர்ந்து நிற்கும் =

29

ہے۔*