பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

15

20

புணர்புரி நரம்பின் தீந்தொடை பழுனிய வணர் அமை நல்யாழ் இளையர் பொறுப்பப், பண் அமை முழவும், பதலையும், பிறவும் கண் அறுத்து இயற்றிய துாம்பொடு சுருக்கிக் காவில் தகைத்த துறைகூடு கலப்பையர், கைவல் இளையர் கடவுள் பழிச்ச, மறப்புலிக் குபூஉக்குரல் செத்து, வயக்களிறு வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கைப் பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்து, தன் மாயிரும் சென்னி அணிபெற மிலைச்சிச், சேஏர் உற்ற செல்படை மறவர், தண்டுடை வலத்தர் போர் எதிர்ந்தாங்கு, வழை அமல் வியன்காடு சிலம்பப் பிளிறும், மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம் ஒன்று இரண்டு அல. பலகழிந்து, திண்தேர், வசையில் நெடுந்தகை காண்கு வந்திசினே; தாவல் உய்யுமோ ? மற்றே. தாவார் வஞ்சினம் முடித்த ஒன்று மொழிமறவர், முரசுடைப்பெரும் சமத்து அரசு படக் கடந்து, வெவ்வர் ஒச்சம் பெருகத், தெவ்வர் மிளகுன்றி உலக்கையின் இருந்தலை இடித்து வைகுஆர்ப்பு எழுந்த, மைபடு பரப்பில்,

எடுத்து ஏறு ஏய கடிப்புடை வியன்கண்

25

வலம்படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து, கால் உளைக் கடுப்பிசிர் உடைய, வால் உளைக் கடுப்பரிப் புரவி ஊர்ந்த நின் படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே.’’ துறை : காட்சி வாழ்த்து. வண்ணம் ஒழுகு வண்ணம். து.ாக்கு : செந்தூக்கு. r பெயர் : சுடர்வி வேங்கை.

28