பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருந்துவதோ, தம்மினும் உயர்ந்து வாழ்வார்பால் வெறுப் புணர்ச்சிக் கொள்வதோ வேண்டுவதில்லை என்பதையும் உணர்த்த வேண்டும் என்று எண்ணினர். அதனுல் மீண்டும் தொடங்கி, வேந்தே! யாம் கடந்து வந்தவழி, தொடக்கத்தி லிருந்து முடிவுகாரும் ஒரே சீரானதன்று; வளமும், வளம் இன்மையும், வனப்பும், வனப்பின்மையும் ஆகிய இருவேறு நிலைகளை மாறி மாறியே கொண்டுளது. ஓரிடத்தே மழை வளம் மிகுந்துள்ளமையால், சுரபுன்னே முதலாம் பல்வேறு மரவகைகள் செறிந்து தோன்றின; பிறிதோரிடத்தே, மழை வளம் மறுத்துவிட்டமையால், முளைவிட்ட சிறுமூங்கில் தாமும் உலர்ந்து உருவற்றுக் கிடந்தன. இவ்வாறு நல்லனவும் அல்லனவும் மாறிமாறிக் காட்டும் நெடுவழிகளைக் கடந்து வந்திருக்கும் யாம் வாழ, நின்தாள் வாழ வேண்டுகிருேம்: வேந்தே! முதற்கண் அதற்கு வழிவகுக்க வேண்டுகிருேம்’ என்று கூறி முடித்தார். அதுவே இது.

உலகில் நிலவும், எந்தப் பொருள் மீதும், நிகழும் எந்த நிகழ்ச்சி மீதும், பகையுணர்வு கொள்வது பொருந்தாது; கொள்வது பேதைமை என்பதே உண்மையாகவும், தம் தோற்றத்தால் பிறர்க்குப் பே f ன் படம் பயக்கவல்ல பொருள்கள் மீது, பகையுணர்வு காட்டுவது பேதைமையினும் பேதைமையாம்; உலகில் அத்தகையார் சிலரும் உளர் என்றால் அவரை என்னென மதிப்பது, எனப் போர்வெறியின் இழி நிலையை உணர்த்தவந்த இச்செய்யுற்கண், அப்பொருட்பேறு சிறக்க நிற்பது; வேழம் கண்டு கடுஞ்சினம்கொண்டது, புலியை அன்று; வேங்கை மரத்தை அதிலும் காண்பவர்க்கு இன்பம் தரும் காட்சியதாகும் கவின்மிகு மலர்களை நிறையக் . கொண்ட வேங்கை ம ர த் ைத ேய எனும் பொருள்தரும், சுடர்வீ வேங்கை என்ற தொடரே ஆதலின், இப்பாட்டிற்கு, அத்தொடரால் பெயரிட்டுப் பாராட்டுவோமாக!

27