பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்தும் வாழ்த்தொலிகள், காதுநிறைவிக்கும் இன்பம் ஊட்டுவனவாம். க ரு நி ற ம் காட்டும் மலைச்சரிவில், பொன்னிறம் காட்டும் பூக்கள் மலர்ந்த வேங்கைமரம் வளர்ந் திருக்கும் காட்சி, காண்பவர் கண்களுக்கு விருந்துரட்டு. வனவாய் விளங்குவது, காணும் எவரும், கழிபேரின்பமே கொள்வர். ஆனால் அவற்றை அவ்வியல்புடைய வாகக் கொள்ளத் தவறிவிட்டது ஒரு களிறு. அதன் உள்ளத்தில் அச்சமும், அச்சம் ஈனும் பகையுணர்வுமே நிறைந்திருந்தமையால், இளையோரின் வாழ்த்தொலியைப், புலிக்கூட்டத்தின் உறுமுக்குரலாகக் கருதிவிட்டது. அதல்ை அதன்கண்முன் காட்சி அளித்த வேங்கைமரம், வரிக்கோடுகள் மலிந்த தோலுடையதான் வேங்கைமாவாகத் தோன்றிவிட்டது. தோன்றவே அஞ்சத்தகாத வேங்கை மரத்தைக்கண்டு, அஞ்சி நடுங்கி விட்டது; அச்சத்தை அடுத்து எழுவது பகையுணர்வேயாதலின், பகைக்க வேண்டாத, வேங்கை மரத்தைப் பகைத்தது. உடனே அதன்மீது பாய்ந்தது; காட்சி நலம் மிக்க அதன் கிளையை முறித்தது; அம்முறிவு, வேங்கையின் மீது கொண்ட வெற்றியாகத் தோன்றவே, அவ்வெற்றிக் களிப்பால், அக்கிளையைத், தன் தலையிற் சுமந்தவாறே, போரில் பகைவரைப் புறங்காட்டப்பண்ணி வெற்றிகண்ட நின்வீரர், தலையில் வாகைமாலை மணக்க, வாளும், தண்டும் ஏந்திய கையராய்த் தருக்கித்திரிவது போ ல், வெற்றிக் களிப்போடு காடெங்கும் திரிந்து அலைந்தது' எனக்கூறினர்.

வழியிடைக்காட்சியை விளக்குவார்போல், போர் உணர் வின் பொருந்தாமையினைப் பொருத்தம்உற உணர்த்திய புலவர், ஒருவர் வாழ, ஒருவர் தாழும் இருவேறு நிலைஇடம் பெற்றிருக்கும், உலகியலே பகையுணர்விற்குக் காரணமாம் என்ற உண்மையை உணர்ந்திருந்தமையால், வாழ்வும் தாழ்வும் உலகியல்; ஆகவே, தாழ்ந்தவர் தம் தாழ்நிலைகண்டு

26