பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போரொழிப்பு உணர்ச்சியைச் செங்குட்டுவன் உள்ளத்தில் புகுத்த விரும்பிய புலவர், ஒரு வ ைர ப் பகைவராகக் கொள்வதும், நண்பராகக் கொள்வதும், கொள்வார்தம் கருத்து வேறுபாட்டின் விளைவேயல்லது வேறு அல்ல. விரும்பினல் பகைவரையும் நண்பராத நயக்கலாம்; வெறுத்தால் நண்பரையும் பகைவராகக் கொள்ளலாம். பகை யுணர்வு பிறந்துவிட்டால், பகைக்கத் தகாதவரையும் பகைக்க நேரிடும். அஞ்சத்தகாதவரைக் காணினும் அஞ்சநேரிடும்; அதன்பயணுய் அ வ ர் க் கு க் கேடுபுரிவதோடு, தாமும் அல்லலுக்கு உள்ளாக நேரிடும் என்ற உண்மை உணர்வை முதற்கண் ஊட்ட விரும்பினர். அதனல் செங்குட்டுவன் அவை அடைந்ததும், வேந்தே! நின்னைக் காணும் ஆர்வம் உந்த, நின்னைக் கண்டு பாராட்டினுல், பெரும் பொருட்பரிசில் பெறலாம் என்ற வேட்கை, பிடர்பிடித்துத் தள்ள, சேணெடும் நாட்டினின்றும் வருகின்றோம்; பேரியாழின் நரம்பாதற்குப் பொருந்தும் வகையில், முறுக்கப்பெற்று, இனிய இசை யெழுப்பவல்ல நரம்புகளையும், வகைபெற வளைந்த தண்டினேயும் உடைய எம் யாழை, ஏவல்இளையோர் சுமந்துவர, யாழ் எழுப்பும் இசைக்கு மேலும் இனிமை ஊட்டவல்ல, துணை இசைகளை எழுப்பும் முழா, ஒருகண்மாக்கிணை, பெருவங்கியம் முதலாம் வேறுபல இசைக்கருவிகளைக் கொண்ட மூட்டைகள், இருபாலும் தொங்கும் காவடிகளைச் சுமந்துவருவார், மலைக்காட்டு வழியில், மரச்செறிவாலும் மலேச்சரிவாலும் இசைக் கருவிகளுக்கு இடையூறு நேராமை வேண்டி, வழியிடைக் கடவுள்களை வாழ்த்திவர, யாம் கடந்துவந்த வழிகள் ஒன்று இரண்டு அல; பற்பலவாம். வேந்தே அவ்வழியிடைக் காட்சிகள், இயற்கை நலம் மிகுந்து இன்பம் ஊட்டுவது ஒரு ாாலாக, ஆங்கு நிகழும் வேறுசில நிகழ்ச்சிகள், வேதனை ஊட்டுவனவாம். எடுத்துக்காட்டிற்கு ஒன்று கூறக் கேட்பா யாக! எம் பி ன் வ ரு ம் இளையோர், கடவுளரை நினைந்து

25